For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேருந்து கட்டண உயர்வு மறுபரிசீலனை செய்யப்படும்- துணை முதல்வர் ஓபிஎஸ்

பேருந்து கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

    தேனி: பேருந்து கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் இதுகுறித்து முதல்வருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

    தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 66 சதவீத கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    O.Panneer Selvam says that bus fare hike will be reconsider

    இந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் போராட்டம் நடத்தினர். திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

    பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பேருந்து கட்டணத்தை இன்றுக்குள் திரும்ப பெறாவிட்டால் நாளை போராட்டம் நடத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்நிலையில் தேனியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் பேருந்து கட்டண உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றார்.

    இந்த நிலையில் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    Deputy CM O.Panneer Selvam says that bus fare hike will be reconsider again. For this we will convene discussion meeting soon, he adds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X