For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் பக்கம் வராவிட்டால் அரசியல் அனாதையாக்கப்படுவீர்கள் - சேலத்தில் கொந்தளித்த ஒபிஎஸ்

சேலத்தில் நடந்த கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சென்றுகொண்டிருக்கும் எங்கள் பக்கம் நீங்கள் வந்தால் மக்களால் மதிக்கப்படுவீர்கள். இல்லையெனில் அரசியல் அனாதையாக்கப்படுவீர்கள் என ஒபிஎஸ் கூறியுள்ளார்

By Suganthi
Google Oneindia Tamil News

சேலம்: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சென்றுகொண்டிருக்கும் எங்கள் பக்கம் நீங்கள் வந்தால் மக்களால் மதிக்கப்படுவீர்கள். இல்லையெனில் அரசியல் அனாதையாக்கப்படுவீர்கள் என சேலத்தில் நடந்த அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

o.panneerselvam edappadi palanisamy salem meeting oneindia

இந்தக் கூட்டத்தில் ஒபிஎஸ் அணியினர் எதிர்பார்த்தற்கும் மேலாக கூட்டம் வந்ததுள்ளது. அது எடப்பாடி கோஷ்டியினருக்கு எரிச்சலை உண்டாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்,இந்தக் கூட்டத்தில் பேசிய ஒ.பன்னீர் செல்வம்,''எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உண்டாக்கப்பட்ட கட்சி இது. நாங்கள் எம்ஜிஆரும் புரட்சி தலைவியும் சென்ற வழியில்தான் செல்கிறோம்.

எதிரணியில் இருக்கும் நீங்கள் எங்களுடன் வந்து இணைந்தால் மக்கள் உங்களை மதிப்பார்கள். இல்லையெனில் அரசியலில் நீங்கள் அனாதையாக்கப்படுவீர்கள்'' என பன்னீர் செல்வம் கூறினார்.

அதிமுகவின் இரண்டு கோஷ்டிகளும் இணையும் என எதிர்பார்த்து அதிமுகவுன் அனைத்துத் தொண்டர்களும் சோர்ந்து போய்விட்டனர். இந்த நிலையில் எடப்பாடி அணியினரை நீங்கள் வந்து சேர வேண்டும் என ஒபிஎஸ் கூறியிருப்பது இரண்டு கோஷ்டிக்குமுள்ள இடைவெளியை அதிகரிக்க்குமே ஒழிய எதிர்பார்க்கும் பலனைத் தராது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

English summary
If u come to our side you will get respect from people. Otherwise you will be abandoned by people said O.Panneerselvam in Salem meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X