For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஏன் எடப்பாடி பழனிச்சாமி அணியோடு இணைப்புக்கு சம்மதித்தேன்.. மனம் திறந்த ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓபிஎஸ் கொடுத்த பரபரப்பு பேட்டி

    சென்னை: தினகரன் 36 அதிமுக எம்எல்ஏக்கள் தன்னுடன் இருப்பதாக கூறிவந்த நிலையில்தான், அதிமுக இணைப்புக்கு சம்மதித்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

    செய்தியாளர்களுக்கு இன்று ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: பாஜகவுடன் நான் கூட்டணி வைத்திருந்ததாக 4 நாட்கள் முன்புதான் தினகரன் கூறியிருந்தார்.
    திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணிகளை பார்த்ததும் தினகரன் விரக்தியில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

    O.Pannerselvam explained why he agree to join AIADMK

    நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். எந்த இயக்கத்தில் இருக்கிறோமோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனது அரசியல் பயணத்தை இப்படித்தான் நடத்தி வருகிறேன்.

    நான் தர்மயுத்தம் நடத்தியபோது 36 அதிமுக எம்எல்ஏக்கள் என்னுடன் உள்ளதாக தினகரன் ஊடகங்களிடம் தெரிவித்தார். நான் தர்மயுத்தம் நடத்தும் நிலையில், எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக கட்சி உடையப்போகிறதே என நான் வருத்தப்பட்டேன்.

    அப்போதுதான் அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி உள்ளிட்டோர் என்னை சந்தித்து, நீங்கள் எதற்காக தர்மயுத்தம் நடத்துகிறீர்களோ அதே மனநிலையில்தான் நாங்கள் உள்ளோம். தினகரனால் கட்சி உடைந்துவிட கூடாது என்றனர். எனவே, மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தாருங்கள் எனக்கு பதவி வேண்டாம் என்றுதான் கூறினேன். ஆனால் நீங்களும் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என கூறி எனக்கு துணை முதல்வர் பதவி தந்தனர். இப்படித்தான் நான் அதிமுக இணைப்பை ஏற்படுத்தினேன்.

    இதனால் தினகரனுக்கு, 36 எம்எல்ஏக்கள் ஆதரவு என்பது 18 எம்எல்ஏக்களாக குறைந்தது. இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

    English summary
    Dy CM O.Pannerselvam explained why he agree to join AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X