For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்படி ஒரு வெயிலை பார்த்ததே இல்லை... புலம்பும் மக்கள் : ஒடிசா, தெலுங்கானாவில் 256 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: என்னா வெயிலுப்பா... இப்படி ஒரு வெயிலை நாங்க பார்த்ததே இல்லை என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர். தமிழகம் முழுவதும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தி வருகிறது.

திருச்சி, வேலூரில் 110 டிகிரிக்கும் மேலாக கொளுத்துகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு வெயிலை பார்த்ததே இல்லை என்று புலம்புகின்றனர் பொதுமக்கள்.

நாடு முழுவதும் வெயிலுக்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓடிசா மாநிலத்தில் இதுவரை 119 பேரும், தெலங்கானா மாநிலத்தில் 137 பேரும் பலியாகி உள்ளனர்.

ஒடிசாவில் கொளுத்தும் வெயில்

ஒடிசாவில் கொளுத்தும் வெயில்

நாட்டில் அதிகபட்ச வெயிலுக்கு ஒடிசா மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில்118 டிகிரிக்கும் அதிகமாக வெயில் வாட்டி வருகிறது. சில இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். இதேபோல் தெலங்கானா மாநிலத்திலும் வெயில் அதிகரித்து காணப்படுகிறது.

வெயில் பலி அதிகரிப்பு

வெயில் பலி அதிகரிப்பு

கடந்த 4 ஆண்டுகளில் 4,204 பேர் வெப்பத்துக்கு பலியாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் புவி அறிவியல் துறை அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி கூறியுள்ளார். 2013-ல், 1,433 பேர் வெப்பத்துக்கு பலியாயினர். இதில், ஒருங்கிணைந்த ஆந்திராவில் மட்டும் 1,393 பேர் பலியாகினர். 2014-ல் 549 பேரும், 2015-ல் 2,135 பேரும் வெப்பத்துக்கு பலியாயினர்.

மார்ச் வரையிலான புள்ளி விபரம்

மார்ச் வரையிலான புள்ளி விபரம்

நடப்பாண்டு மார்ச் வரை 87 பேர் பலியாகியுள்ளனர். தெலங்கானாவில் அதிகபட்சமாக 56 பேரும், ஒடிசாவில் 19 பேரும், ஆந்திராவில் 8 பேரும் பலியாகியுள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய பலி நிலவரம்

இன்றைய பலி நிலவரம்

தெலங்கானாவில் வெயிலின் கொடுமைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 137ஆக அதிகரித்துள்ளது. இதில், அதிகபட்சமாக மேடக் மாவட்டத்தில் மட்டும் 34 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மெஹபூப்நகரில் 30 பேரும், நல்கொண்டாவில் 26 பேரும், ரங்காரெட்டியில் 10 பேரும், கம்மமில் 7 பேரும், கரீம்நகரில் 13 பேரும், அடிலாபாதில் 9 பேரும், நிஜாமாபாதில் 8 பேரும் இதுவரை உயிரிழந்தனர் என்று அம்மாவட்ட புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

இன்றைய வெப்பநிலை

இன்றைய வெப்பநிலை

சென்னை 97, மதுரை 100, திருச்சி 105, கோவை 101, திருப்பூர் 103, கரூர் 103, சேலம் 103, வேலூர் 101, நாமக்கல் 103, கிருஷ்ணகிரி 100, தருமபுரி 102, விருதுநகர் 101, திருநெல்வேலி 93, கன்னியாகுமார் 91 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

English summary
The temperatures in the city in the past few days showed a marked increase over the figures recorded for the month in the past three decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X