For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீபாவளி எதிரொலி.. ஆம்னி பஸ் கட்டணம் 2 மடங்கு உயர்வு.. மதுரை ரூ. 880.. நாகர்கோவில் ரூ. 950! #diwali

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முரை பெருங்களத்தூரில் ஆம்னி பஸ்கள் நிற்காது என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. இந்த நிலையில் ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 2 மடங்கு அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Omini bus fare hiked

இந்த முறை பெருங்களத்தூரில் ஆம்னி பஸ்கள் நிற்காது என்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திலிருந்து கிளம்பும் பஸ்கள் நேராக ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில்தான் போய் நிற்கும். இடையில் எங்கும் நிற்காது. எங்கும் ஏற்றவும் மாட்டோம். அரசின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை.

இந்த முறை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் பிரச்சினை வராது. அந்த அளவுக்கு அனைவருக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளோம். மேலும் கரண்ட் புக்கிங் ரத்து செய்யப்பட்டு விட்டது. மாறாக ஆன்லைன் புக்கிங் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றார்.

புதிய கட்டண உயர்வு:

ஊட்டி, கொடைக்கானல் - ரூ. 950
கேரளாவின் கொல்லம், எர்ணாகுளம் - ரூ. 1200
பெங்களூர் நான் ஏசி - ரூ. 770
சேலம், நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவாரூர் - ரூ. 750
காரைக்குடி, சிவகங்கை அறந்தாங்கி - ரூ. 790
சிவகாசி, கம்பம், தேனி, போடி, பெரியகுளம் - ரூ. 935
நாகர்கோவில், தென்காசி, திருச்செந்தூர், தூத்துக்குடி - ரூ. 950
மதுரை, கோவை, திருப்பூர் - ரூ. 880
திண்டுக்கல் - ரூ. 790

English summary
Omini bus owners association has hiked the fare on the eve of Diwali. The fare has been hiked double than the last year Diwali. The association has said that current booking has been cacelled this year and online booking only will be done.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X