For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓய்வு பெறுகிறார் ஜோதி.. புதிய தலைமை தேர்தல் ஆணையராகிறார் ஓம் பிரகாஷ் ராவத்!

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார்.

21-ஆவது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி கடந்த ஜூலை மாதம் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் வரும் 22-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

OmPrakash Rawat take over charge as Chief Election Commissioner by next week

தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையர், இரு தேர்தல் ஆணையர்கள் கொண்ட ஒரு அமைப்பாகும். தலைமை தேர்தல் ஆணையராக இரு தேர்தல் ஆணையர்களில் பதவி மூப்பு அடிப்படையில் உள்ள ஒருவரை குடியரசு தலைவர் நியமிப்பது வழக்கம்.

அதன்படி தேர்தல் ஆணையர்களாக உள்ள ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா ஆகியோரில் ராவத் மூத்த அதிகாரியாவார். அவரை தலைமை தேர்தல் ஆணையராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கவுள்ளார். இவர் 22-ஆவது தலைமை தேர்தல் ஆணையராவார்.

English summary
As the incumbent Chief Election Commissioner Achal Kumar Jyoti is going to retire by this month, then Election Commissioner Om Prakash Rawat is elevated for that post and he will take charge by next week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X