For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட்டில், புதிய திட்டங்களை அறிவிக்க அதிமுக திட்டமாம்.. உள்ளாட்சித் தேர்தல் வருவதால்!

தற்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக பட்ஜெட்டில் மக்களை கவர்வதற்கான என்ன மாதிரியான திட்டங்களை அறிவிக்கலாம் என்று ஆளும் அதிமுக அரசு யோசனை செய்து வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பட்ஜெட்டில் எந்த மாதிரியான திட்டங்களை அறிவிக்கலாம் என்பது குறித்து அதிமுக அரசு வியூகம் வகுத்து வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலை வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் ஆளும் அரசோ பொது மக்களிடமும், கட்சி நிர்வாகிதளிடமும், எதிர்க்கட்சியினரிடமும் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளது.

On the account of Civic polls, ADMK plans to introduce new schemes

இதனால் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை வெற்றியை பெற ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் கடுமையாக போராடி வருகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே மக்களின் செல்வாக்கைப் பெற்றதாக கருதப்படுகிறது. ஆகையால் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட எடப்பாடி தலைமையிலான அரசு தற்போது வியூகம் வகுத்து வருகிறது.

தமிழக சட்டசபையில் இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் மக்கள் நலதிட்டங்களை அறிவித்து மக்கள் ஆதரவை பெற அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி எந்த மாதிரியான திட்டங்களை அறிவித்து மக்களின் நன்மதிப்பை பெறலாம் என்று தீவிரமாக யோசித்து வருகிறது.

English summary
To get the people's support in the coming civic polls, the TN govt is planning to introduce people's welfare related new schemes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X