For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மைதானத்திற்கு கமாண்டோ, அதிதீவிர படை பாதுகாப்பு.. சாலைகளுக்கு சீல்: தீயா வேலை செய்யும் போலீஸ்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ மற்றுஹம் அதிதீவிர படை பாதுகாப்பு போடப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு நிறைய விதிமுறைகள்- வீடியோ

    சென்னை: சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ மற்றும் அதிதீவிர படை பாதுகாப்பு போடப்படும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.

    சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அதிரடிப்படை பாதுகாப்பு போடப்படும் என சென்னை போலீஸ் அறிவித்துள்ளது.

    கமாண்டோ படை, அதிதீவிர படை

    கமாண்டோ படை, அதிதீவிர படை

    சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ படையின் ஒரு அணியும் அதிதீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளாது.

    பாதுகாப்பு அதிகரிப்பு

    பாதுகாப்பு அதிகரிப்பு

    ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சாலைகளுக்கு சீல்

    சாலைகளுக்கு சீல்

    மேலும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் நாளை மாலை 6 மணிக்கு மூடப்படும் என்றும் சென்னை போலீஸ் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை நாளை மாலை 6 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போலீஸ் அறிவிப்பு

    போலீஸ் அறிவிப்பு

    பலத்த சோதனைக்குப் பிறகே பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

    English summary
    Chennai Police has annouced that One team of commando force and four extreme force teams will be protect for Chepak Stadium.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X