For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனிதா நீ கருகிப் போக எமனாக வந்தது நீட் தேர்வு... ஒன்இந்தியா வாசகர்கள் கண்ணீர் கவிதை!

அனிதாவின் இறப்பு குறித்து ஒன் இந்தியா வாசகர்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டன. அதில் இருந்து கவிதை ஒன்று.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மாணவி அனிதா போல நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள பல மாணவ, மாணவிகள் நலன்காக்க உங்கள் யோசனையை கூறுங்கள் என நமது 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்களிடம் கேட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து வாசகர்கள் தங்கள் கருத்துகளை குறிப்பிடப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளனர். அதில் ஏராளமானோர் தமிழக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

One India readers sent a poem for Anitha

மேலும் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அனிதாவுக்காக வாசகர்கள் பாலாஜி, யாசின்ன் எழுதிய கவிதைகள்:

பாலாஜி:

நீ கருத்த குழந்தையாய் ஏன் பிறந்தாய் ??
நீ கருத்தாய் படிக்கும் மகளாய் ஏன் வளர்ந்தாய் ??
நீ கற்பதை கடமையாய் எண்ணியதாலோ ,,இன்று
நீ கயிற்றால் கழுத்தை சுருக்கவிட்டாய்
நீ கருவாய் வளர்த்த மருத்துவ கனவு
நீ கருகிப்போக எமனாக வந்தது நீட் தேர்வால்
நீ கருகலைந்த தாயின் வலியை போன்று உணர்ந்தாயோ என்னவோ ??
நீ கரைந்து போனாய் உன் கனவை கருவாய் விதைத்துவிட்டு
நீ நீட் விலக்கிற்க்காக நீதி கேட்டு நீதி மன்றம் சென்றாய்
நீ நீதிகெட்ட அதிகார கரைவேட்டி கயவர்களால் நீர்த்துபோனாய் !!!
நீ மருத்துவச்சிதான் எங்களுக்கு எப்பொழுதும் !!!
உன் ஆத்மா சாந்தி அடையட்டும்.!!!

வாசகர் அகமது யாசின் அனிதாவுக்காக எழுதிய கவிதை:

அவசர அவசரமாய்
அன்னியனை வெளியேற்றி
படு பாதாள பள்ளத் தாக்கில்
சுனாமி சுழற்சியில்
சிக்கிக் கொண்டு
தத்தளிக்கின்றோம்!

மோடிக்கு ஆடி பட்டம் விடும்
பதவி பித்தர்களிடம்
அகப்பட்டு அன்னவர்கள்
கோரப்பிடியில்
இன்று ஒரு அனிதா
தூக்கு மேடை
அரியாசனம் ஏறக்கண்டோம்
இன்னு மின்னும்
எத்தனை எத்தனை
அனிதாக்கள்
காத்திருக்கும் பட்டியலில்
யாமறியேன் பராபரனே!

பொறுத்தது போதும்
பொங்கி எழு தமிழகமே!

புதிய விடியல்
புதிய வசந்தம்
புதிய தமிழகம்
இன்னும் கொஞ்ச நாளில்...

விடியலுக்குக் காத்திருக்கும்
அன்னக்கிளி அனிதாவின்
உடன்பிறப்புக்கள்......

English summary
Readers of One India's comments on Anitha's issue gave suggestion. Readers sent poem for Anitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X