For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க அடுத்த தலைவராகலாம்.. வானதிக்கு செம ஆதரவு.. எச். ராஜாவுக்கு பெருசா இல்லை!

தமிழக பாஜகவின் தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட வாய்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்

    சென்னை: அடுத்த தமிழக பாஜக தலைவர் வானதி சீனிவாசனாகத்தான் இருக்க முடியும் என்றும் அடுத்தடுத்த செய்திகள் நம்மை கணிக்க வைத்து வருகின்றன.

    இப்போதைக்கு தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. 2 நாட்களுக்குள் இந்த பதவி நிரப்பப்பட உள்ளது. இதற்காக 6 பேர் ரேஸில் உள்ளனர். இருந்தாலும், இதுவரை இருந்த பாஜக தலைவர்கள் யாரும் இனி வேண்டாம், அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை முடிவு செய்து வைத்திருக்கிறது.

    அதனால்தான், கருப்பு முருகானந்தம், கோவையைச் சேர்ந்த ஏபி முருகானந்தம் , மதுரை பாஜகவை சேர்ந்த சீனிவாசன், சிபி ஆர் பெயர்களும் அடிபட்டன. இதில் அதிகமான ஆதரவு வானதி சீனிவாசனுக்கும் உள்ளதாக தெரிகிறது. வானதியை பொறுத்தவரை, தமிழிசைக்கு இணையாக பாஜகவில் செயல்பாடுகளை வெளிப்படுத்தியவர்.

    தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..!தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்.. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் தமிழகம்..!

    மேற்கு மண்டலம்

    மேற்கு மண்டலம்

    மேற்கு மண்டலத்தில் இன்றுவரை தனது செல்வாக்கை விட்டுக்கொடுக்காமலும், அதே சமயம் வெளிப்படுத்த தவறாமலும் ஒவ்வொரு முறையும் முயன்று வருகிறார். போன முறை எம்பி தேர்தலில் சீட் கேட்டு தலைமையிடம் நிறையவே மெனக்கெட்டார். அதற்காக இதுவரை கோவை மாவட்டத்துக்கு என்னென்ன நல்ல காரியங்கள் செய்தாரோ, அவை எல்லாவற்றையும் லிஸ்ட் போட்டு டெல்லியில் கொடுத்தார்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    கடந்த சட்டமன்ற தேர்தலிலும் 30 ஆயிரம் வாக்குகளையும் வாங்கியிருந்தார். இவ்வளவு இருந்தும் போட்டியிட வாய்ப்பு தராமல் சிபிஆருக்கு தரப்பட்டு விட்டதால் வருத்தத்தில் இருந்தார். ஒருவேளை இதை சரிக்கட்ட வானதிக்கு மாநில தலைமை பதவி தரப்படும் என்றே தெரிகிறது.

    கருத்து கணிப்பு

    கருத்து கணிப்பு

    அந்த வகையில், நேற்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்து என்ற பெயரில் வானதிக்கு அடுத்த பாஜக தலைவராக வாழ்த்துக்கள் என்றும் சோஷியல் மீடியாக்களில் ட்வீட்கள் பறந்தன. இதனிடையே "ஒன் இந்தியா தமிழ்" சார்பிலும் மக்களின் கருத்தை அறிய முற்பட்டோம். அதற்காக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், "தமிழிசை இடத்தை யாரால் வெற்றிகரமாக நிரப்ப முடியும்?" என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

    எஸ்.வி.சேகர்

    எஸ்.வி.சேகர்

    அதற்கு வானதி சீனிவாசனுக்கு 34.69 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர். பொன். ராதாகிருஷ்ணனுக்கு 11.42 சதவிதம் பேர் வாக்களித்துள்ளனர். சிபி ராதாகிருஷ்ணனுக்கு 3.16 சதவீதம், எச்.ராஜா 9.38 சதவீதம் பேரும், எஸ்வி சேகர்3.5 சதவீதம் பேரும் வேறு யாராவது 11.46 சதவீதம் பேரும் வாக்களித்தள்ளனர். யாராலும் நிரப்ப முடியாது என்ற ஆப்ஷனுக்கு 26.36 சதவீதம் பேர் ஓட்டளித்துள்ளனர்.

    ஆதரவு

    ஆதரவு

    இந்த கருத்து கணிப்பு பொருத்தவரை, வானதி சீனிவாசனுக்கு மக்களிடம் அமோக ஆதரவு உள்ளதாக தெரிகிறது. அதே நேரம், அதிக ஆர்வமுடன், ஆசையுடன் காத்திருக்கும் எச்.ராஜாவுக்கு 9.38 சதவீதம்தான் உள்ளதும் தெரியவந்துள்ளது. வானதிக்கு இவ்வளவு ஆதரவு பெருக என்ன காரணமாக இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.

    மீண்டும் பெண்?

    மீண்டும் பெண்?

    ஒருவேளை மேற்கு மண்டலத்தை விடாமல் கெட்டியாக பிடித்து கொண்டிருப்பது வானதியின் திறமைக்கு உதாரணமாக இருக்கலாம். மேலும் அதிமுக தரப்பிலும் வானதிக்கு என்று பெரிய எதிர்ப்பு எப்போதுமே இல்லாதது பிளஸ்ஸாக இருக்கலாம். இதை தவிர, திமுகவுக்கு உரிய பதிலடியை தர, வானதி சரியான நபர் என்பதையும் பாஜக கருத்தில் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும் ஏற்கனவே ஒரு பெண் பொறுப்பேற்றிருந்த நிலையில், மீண்டும் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்படுவாரா என்பதும் இன்னொரு பக்கம் சந்தேகமாக உள்ளது

    English summary
    Tamil one India takes surevey from readers about Who is the next Tamilnadu BJP leader
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X