For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கிளா படுத்துப் போராடிய "சிங்கம்".. புதுச்சேரி பஸ் ஸ்டாண்ட்டில் பரபரப்பு! #cauvery

Google Oneindia Tamil News

புதுச்சேரி: காவிரி பிரச்சினை தொடர்பாக இன்று புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழக அரசுப் பேருந்து ஒன்றை டிரைவர் எடுக்க முயன்றபோது ஒருவர் மட்டும் தனியாக பஸ் முன்பு படுத்துக் கொண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கைது செய்து அப்புறப்படுத்திய பின்னர் பஸ் புறப்பட்டுச் சென்றது.

தனி நபராக போராடிய அந்த போராட்டக்காரர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 50 வயதான அவர் அம்பேத்கர் மக்கள் சங்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளத.

One man protest in Puducherry for Cauvery

புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போ ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அதே வேளையில் தமிழகம் மற்றும் புதுவை அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

இன்று காலை 7 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட தயாரானது. அப்போது திடீரென ஒருவர் பஸ்சை இயக்க கூடாது என வலியுறுத்தி அந்த பஸ் முன்பு படுத்து போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்ததும் அருகில் இருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய அந்த நபரை உருளையன் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

விசாரணையில் அவர் பெயர் சந்திரன் என்று தெரிய வந்தது. காவிரிப் பிரச்சினைக்காக எந்த அமைப்பு, கட்சியுடனும் சேராமல் தனியாக அவர் போராடியதாக தெரிவித்தாராம்.

English summary
A single man staged protest in Puducherry in support Cauvery farmers today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X