For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்கூல் லீவுக்காக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்: அமைச்சர் சீனிவாசனின் தொடரும் சர்ச்சை பேச்சு

அமைச்சர் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு தொடருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    அமைச்சர் சீனிவாசனின் தொடரும் சர்ச்சை பேச்சு-வீடியோ

    சிவகங்கை: பள்ளிக்கூட லீவுக்காக குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்றதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

    அமைச்சர் சீனிவாசனின் ஒவ்வொரு மேடைப் பேச்சுமே சர்ச்சையாகவே இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீனிவாசன், ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டார் என கூறியிருந்தார்.

    One more controversy speech of TN Minister Dindigul Srinivasan

    ஜெயலலிதா கொள்ளையடித்ததாக சீனிவாசன் பேசியது அதிமுகவினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதைவைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன.

    இந்த நிலையில் சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது:

    ஸ்டூடன்ஸ் எல்லாம் போராட்டம்.. .எது ஒன்னுனாலும் போராட்டம்..அந்த நேரத்தில்தான் ஜல்லிக்கட்டு பிரச்சனை.

    எல்லா கிராமங்களும் தீப்பிடித்து எரியுது.. ஏதோ ஒரு போராட்டம் லீவு வேணும்னு சொல்லி குழந்தைகள் குட்டிகள் எல்லோரும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆதரித்தாங்க

    இவ்வாறு சீனிவாசன் பேசினார்.

    English summary
    TamilNadu Minister Dindigul Srinivasan said that Jallikattu protest held for only School leaves.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X