For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஞ்சியிருக்கும் அதிமுக அணியும் ஐக்கியமாகிறது- பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

எஞ்சியிருக்கும் அதிமுக அணியும் விரைவில் ஐக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் எஞ்சியிருக்கும் அணியும் விரைவில் ஐக்கியமாக உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவை சிந்தாமல் சிதறாமல் பாதுகாப்பதில் டெல்லி ரொம்பவே மெனக்கெடுகிறது. முதலில் அதிமுகவின் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளை இணைத்தாலே போதும் என நினைத்தது டெல்லி.

திமுகவுக்கு செக்

திமுகவுக்கு செக்

இதற்காக சென்னை புள்ளி பேச்சுவார்த்தை நடத்தினார். திமுக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதை முன்வைத்து இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தினகரன் பலம்

தினகரன் பலம்

இரு அணிகளும் இணைந்த நிலையில் தினகரன் தரப்பு போர்க் கொடி தூக்கியது. முதலில் தினகரன் அணிக்கு அதிகபட்சம் 10 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பார்கள் என கணித்தது டெல்லி.

50 எம்.எல்.ஏக்கள்

50 எம்.எல்.ஏக்கள்

ஆனால் தினகரன் பக்கம் குறைந்தது 50 எம்.எல்.ஏக்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதை உளவுத்துறை மூலம் உறுதி செய்தது டெல்லி. இதனால் தினகரனையும் தற்போது இணைக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

தினகரன் தரப்பு கோரிக்கைகளான முதல்வர் பதவி மாற்றம் உள்ளிட்டவை குறித்து சென்னை புள்ளியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இருமுறை நடந்த பேச்சுவார்த்தையும் சுமூகமாக நடந்ததாக கூறுகின்றன அதிமுக வட்டாரங்கள்.

English summary
Sources said that One more faction also merger with AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X