For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வில் தோல்வி.. விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி..மருத்துவமனையில் அனுமதி!

நீட் தேர்வால் விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி- வீடியோ

    விழுப்புரம்: நீட் தேர்வால் விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தகுதி தேர்வு முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி அவசர அவசரமாக அறிவித்த தேதிக்கு முன்னால் வெளியிடப்பட்டது.

    இதில் தமிழகத்தில் இருந்து வெறும் 40% பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். இதனால் மருத்துவம் படிக்கலாம் என்ற கனவில் இருந்த மாணவ மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    பிரதீபா பலி

    பிரதீபா பலி

    இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ப்ளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வில் தகுதி பெறாததால் தற்கொலை செய்து கொண்டார்.

    சுபஸ்ரீ தற்கொலை

    சுபஸ்ரீ தற்கொலை

    நேற்று திருச்சி சமயபுரத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் இன்று விழுப்புரம் அருகே மேலும் ஒரு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    தற்கொலை முயற்சி

    தற்கொலை முயற்சி

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சேஷாங்கனூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரின் மகள் அஷ்டலட்சுமி. இவர் 12 ஆம் வகுப்பில் 738 மதிப்பெண்ணும், நீட் தேர்வில் 8 மதிப்பெண்ணும் பெற்று உள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதி

    மருத்துவமனையில் அனுமதி

    இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் உள்ள அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    English summary
    One more students commit suicide attempt after fails in NEET Exam near Vilupuram. A female student named Ashtalakshmi commit suicide attempt has been admitted in hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X