For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீரங்கம் தேர்தலில் கள்ள ஓட்டு போட்டால் ஓராண்டு சிறை: தலைமை தேர்தல் அதிகாரி

By Siva
Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போடுபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தன. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

One year jail for vote rigging: TN CEO Saxena

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஸ்ரீரங்கம் தேர்தலில் யாராவது கள்ள ஓட்டு போட்டால் அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். வாக்குப்பதிவை வெப்கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம். 741 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாளை பயன்படுத்தப்பட உள்ளது. தமிழக போலீசார் 2 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

முன்னதாக தேர்தலையொட்டி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து முடித்துவிட்டதாக திமுக புகார் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TN CEO Sandeep Saxena told that those who indulge in vote rigging will get one year imprisonment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X