For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா உரையை விட ஸ்டாலின் உரைதான் பெஸ்ட்: ஒன் இந்தியா வாசகர்கள் 'தீர்ப்பு'

ஸ்டாலினின் பொதுக்குழு உரையை ஒன் இந்தியா வாசகர்கள் வரவேற்றுள்ளனர்; சசிகலா உரைக்கு மிக குறைவான எண்ணிக்கையில் ஆதரவு கிடைத்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கட்சிகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு உரையாற்றியதில் சசிகலா உரையைவிட ஸ்டாலின் உரைதான் பெஸ்ட் என 'தீர்ப்பளித்துள்ளார்கள்' நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள்.

அதிமுகவின் பொதுச்செயலராக பதவியேற்றுக் கொண்டு கடந்த டிசம்பர் 31-ந் தேதி 5 முறை அழுதபடியே சசிகலா உரையாற்றினார். இன்று திமுகவின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் உருக்கமாக பொதுக்குழுவில் பேசினார்.

இந்த இருவரில் எவர் ஆற்றிய உரை பெஸ்ட்? என நமது ஒன் இந்தியா வாசகர்களிடம் கேட்டிருந்தோம். இதோ நமது வாசகர்கள் அளித்த தீர்ப்பு:

சசிகலாவுக்கு 5.4%

சசிகலாவுக்கு 5.4%

மொத்தம் 19,092 பேர் பங்கேற்ற இக்கருத்து கணிப்பில் சசிகலா உரை பெஸ்ட் என 5.42% மட்டுமே கூறியுள்ளனர். அதாவது 1,035 பேர்தான் சசிகலா உரை பெஸ்ட் என்கின்றனர்.

ஸ்டாலினுக்கு அமோக ஆதரவு

ஸ்டாலினுக்கு அமோக ஆதரவு

ஸ்டாலின் உரைதான் பெஸ்ட் என 26.61% பேர் கூறியுள்ளனர். கருத்து கணிப்பில் பங்கேற்றோரில் 5,081 பேர் ஸ்டாலின் உரை பெஸ்ட் என்கின்றனர்.

இரண்டுமே நல்லா இல்லை

இரண்டுமே நல்லா இல்லை

இருவரது உரையுமே நன்றாக இல்லை என 10.3% பேர் அதாவது 1,966 பேர் வாக்களித்துள்ளனர்.

இரண்டுமே சூப்பர்- நோ கமெண்ட்ஸ்

இரண்டுமே சூப்பர்- நோ கமெண்ட்ஸ்

இரண்டுமே சூப்பர் என 108 பேர் அதாவது 0.57 கூறியுள்ளனர். அதேபோல் நோ கமெண்ட்ஸ் என 8.07% பேர் அதாவது 1,540 பேர் கூறியுள்ளனர்.

சீற்றமே அதிகம்

சீற்றமே அதிகம்

ஸ்டாலினுடன் சசியை ஒப்பிடுவதா? என சீறியிருப்பவர்கள்தான் மிக மிக அதிகம். மொத்தம் 49.04% பேர் ஸ்டாலினோடு சசியை ஒப்பிடுவதா? என சீறியுள்ளனர். அதாவது 9,362 பேர் இந்த ஆப்சனை தேர்ந்தெடுத்துள்ளனர்.

English summary
According to Oneindia Tamil online poll people welcome to DMK's new working President MK Stalin's speech at General Council Meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X