For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓஎன்ஜிசி மூலம் தமிழகத்தை அழிக்க நாசகாரத் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய அரசு : வேல்முருகன்

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் தமிழகத்தை அழிக்க நாசகாரத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தின் விவசாய நிலங்களை அழிக்க நாசகாரத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த நினைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக மக்களும், தமிழக அரசும் எதிர்க்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் ஹட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக விவசாய நிலங்களை அழிப்பதற்கான முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தமிழ் இன அழிப்பு

தமிழ் இன அழிப்பு

மேலும், மத்தியில் மோடியின் பாஜக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அது மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அவற்றை அரசியல் அதிகாரமற்ற உள்ளாட்சி அமைப்பு என்ற நிலைக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை உள்ளாட்சி அமைப்பு என்ற நிலையில்கூட அல்ல; தமிழ் என்ற ஓர் இன அடையாளமே கூடாது என்று, தனது நலனுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் தமிழ்நிலத்தையே அழித்தொழிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது. அதற்காக அது செயல்படுத்திவரும் நாசகாரத் திட்டம் இப்போது அம்பலமாகியிருக்கிறது.

 மோடி அரசின் செயல்பாடு

மோடி அரசின் செயல்பாடு

தமிழ்நாட்டின் உயிராதாரமான விவசாய மண்டலமாக இருக்கும் காவிரி பாசனப்பகுதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் முதலான நச்சு வேதிப்பொருள்களை எடுப்பதற்கான 700க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைக்கும் பணிகளை ஓஎன்ஜிசி மூலம் முடுக்கிவிட்டிருக்கிறது மோடி அரசு.

 பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

இதனால் தமிழ்நிலம் எதற்கும் ஆகாத பாழ்நிலமாக்கப்படும்; அப்போது வாழ்நிலமாக அதைக் கொள்ள முடியாத நிலையில் தமிழினமே ஒட்டுமொத்தமாக இடம்பெயரும்; அப்படியாக தமிழினம் என்ற அடையாளமே இல்லாமல் போகும்; இப்படிக் கணக்குப் போட்டுத்தான் காரியத்தில் இறங்கியிருக்கிறது மோடி அரசு. காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்" என்பதற்கு மாறாக அதனை அழித்தொழிக்கும் நாசகாரத் திட்டத்தினை ஓஎன்ஜிசி மூலம் டெல்லி செயல்படுத்திக் கொண்டிருப்பது ஆதாரங்களுடன் இன்று தெரியவந்திருக்கிறது.

 அனுமதி பெறாத கிணறுகள்

அனுமதி பெறாத கிணறுகள்

இது குறித்து காவிரி டெல்டா கண்காணிப்பகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து இந்த வஞ்சகத் திட்டம் வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் 219 கிணறுகள் குறித்த ஆவணங்கள் இருக்கின்றன; ஆனால் கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் தன்வசம் 700 கிணறுகள் இருப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது என்பது மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பெற்ற தகவல்களிலிருந்து தெரிய வருகிறது.

 சுற்றுச்சூழல் உரிமம் இல்லை

சுற்றுச்சூழல் உரிமம் இல்லை

71 கிணறுகள் மட்டுமே இயங்கும் நிலையில் இருக்கின்றன; அவற்றிற்கும் செயல்படுவதற்கான சுற்றுசூழல் உரிமம் இல்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணம். ஆனால் 183 கிணறுகளில் உற்பத்தி நடப்பதாக ஓஎன்ஜிசி சொல்கிறது; மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவணங்களின்படி மேலே சொன்ன எந்த கிணற்றுக்கும் இயங்குவதற்கான ஒப்புதல் இல்லை. இப்படி சட்டவிரோதமாகச் செயல்படும் ஓஎன்ஜிசியால் தொடர்ந்து விபத்துகள், நச்சு எண்ணெய் கசிவுகள். அதனால் விளைநிலங்கள் பாழ்பட்டன; நீர்நிலைகள் மாசுபட்டன. பல இடங்களில் எண்ணெய் கொட்டிய எந்த இடத்தையும் மீட்டெடுக்க முடியவில்லை என்கிறது மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆவண அறிக்கை.

 சட்டவிரோத திட்டங்கள்

சட்டவிரோத திட்டங்கள்

இதுபோல் பேரழிவு சம்பவங்கள் 2008லிருந்தே நடந்துவருகின்றன என்பதுதான் உண்மை; எந்த அனுமதியும் பெறாமல்தான் ஓஎன்ஜிசி இயங்கிவருகிறது என்பதுடன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க வேண்டிய பொது அமைப்பாக அது இருந்தும், சுற்றுச்சூழல் உரிமம் உள்ளிட்ட அடிப்படை விவரங்களைக் கேட்டால்கூட, ஏதாவது காரணங்களைக் காட்டி, அதைச் சொல்வதில்லை என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை கூறுகிறது. ஆக, சட்டவிரோதமாகவே இந்த நாசகாரத் திட்ட தமிழ்நிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு முடிவு கட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
ONGC is spoiling Tamilnadu by Hydro Carbon Plans says Tamizhaga valurumai katchi leader Velmurugan. He also added that, Central Government is supporting ONGC to spoil Taminadu Agricultural Lands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X