For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஆல் லேடீஸ் அட்டென்ஷன்"... பொங்கல் வரை "இத" சேத்துகாதீங்க ப்ளீஸ்!

சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து வருவதால் அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைந்துள்ளதால் அதன் விலை தற்போது கிலோவுக்கு ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சின்னவெங்காயம் வைத்து காய்கறிகளே போடாமல் சாம்பார், வற்றக் குழம்பு வைத்தால் தேவாமிர்தமாக இருக்கும். அதன் மணமும் தூக்கும். இதனால் இந்த சின்ன வெங்காயங்கள் சமையலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.

Onion price goes high in market

வெறும் கஞ்சி அல்லது பழைய சோறுக்கு சின்ன வெங்காயத்தை விட பெட்டர் சைடு டிஸ் இல்லவே இல்லை. இத்தனை சிறப்புகளை பெற்ற சின்ன வெங்காயம் தேனி, கம்பம், திண்டுக்கல், தூத்துக்குடி, ஈரோடு, சேலம், பல்லடம் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாிவல் மைசூர், பல்லாரி, நஞ்சன்கோடு உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். இந்நிலையில் சின்னவெங்காயம் கடந்த 3 மாதங்கள் விலை ஏற்றமாகவே இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.80 லிருந்து 100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்னவெங்காயம் கடந்த சில வாரங்களாக ரூ.150 முதல் 180 வரை நீடிக்கிறது.

இதனால் காய்கறி சந்தைகளிலும் சின்ன வெங்காய விற்பனை சொற்ப அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக பெரிய வெங்காயத்தைத் தான் அனைத்து வியாபாரிகளும் விற்பனை செய்கின்றனர். மக்களும் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக பெரிய வெங்காயத்தையே வாங்குகின்றனர்.

மார்க்கெட்டுகளுக்கு லாரிக்கணக்கில் வந்த சின்ன வெங்காயம் இன்று ஒரு லாரி அல்லது இரு லாரிகளோடு நின்றுவிடுகிறது. உற்பத்தி குறைந்துள்ள காரணத்தினால் இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது. பொங்கல் வரை இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

English summary
Due to less production in Shallots, its price goes high. There will no chance to price reduction till Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X