For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைனில் சூடு பிடிக்கும் மாடுகள் விற்பனை: குயிக்கர், ஓஎல்எக்ஸில் வரிசைகட்டும் விளம்பரங்கள்!

ஆன்லைனில் மாடுகள் விற்பனை, ஓஎல்எக்சில் மாடுகள் விற்பனை, குயிக்கரில் மாடு விற்கனை, இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்கு தடை எதிரொலி

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : பசுக்கள், ஜெர்சி பசுக்கள் என விலைவாரியாக மாடுகள் மறுவிற்பனைக்காக ஆன்லைன் இணையதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

டிஜிட்டல் இந்தியா யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் ஈ காமெர்ஸ் என்று சொல்லப்படும் இணைய வழி வர்த்தகமும் கொடி கட்டி பறக்கிறது.

Online cattle sales hiked in olx and quikr websites

வீட்டில் இருந்தபடியே உணவு, உடை, வீட்டிற்குத் தேவையான பொருட்கள், செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் என எல்லாவற்றையும் இருந்த இடத்திலேயே வாங்கி விடலாம்.

புதிய பொருட்கள் மட்டுமல்ல பயன்படுத்திய பொருட்களை மறு விற்பனை செய்ய விரும்புபவர்களுக்காகவும் சில ஈ காமெர்ஸ் தளங்கள் செயல்பட்டு வருகின்றன. ரியல் எஸ்டேட் தொடங்கி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என்று இதிலும் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றை தேவையான பட்ஜெட்டில் பெற்றக் கொள்ளலாம்.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மாட்டுச் சந்தைகளுக்கு கொண்டு வரும் மாடுகளின் வரத்து குறைந்தது. இந்நிலையில் தமிழகம் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து பசுக்களை விற்பதற்காக ஆன்லைனில் புகைப்படத்துடன் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

Online cattle sales hiked in olx and quikr websites

பசுக்கள், ஜெர்சி பசுக்கள் என விலைவாரியாக மாடுகள் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் இது போன்ற விளம்பரங்களை ஏற்கனவே செய்து வருகின்றன. ஆனால் இந்த வரிசையில் கேரளா மற்றும் தமிழகமும் தற்போது இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
OLX, Quicker websites have received more cattle for online sales and it seems to be the ban for cattle slaughter in the markets
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X