For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்யப்போறீங்களா - ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுங்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

திருச்செந்தூர் : ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம் என்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அனுமதி சீட்டை நாளை முதல் திருக்கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில்(www.tnhrce.gov.in) முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கோவில்கள் அனைத்தும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளன. 5 மாதங்களுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Online tickets are required to visit Thiruchendur Subramania samy temple

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க ஆன்லைன் டிக்கெட் தரிசனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 6ஆம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை.. மதுரை, கோவை, திருச்சி, நாகர்கோவில்.. ரயில் ஓடப் போகுது.. ரிசர்வ் பண்றவங்க பண்ணிக்கலாம்!சென்னை.. மதுரை, கோவை, திருச்சி, நாகர்கோவில்.. ரயில் ஓடப் போகுது.. ரிசர்வ் பண்றவங்க பண்ணிக்கலாம்!

ஆன்லைன் முன் பதிவின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை எனவும் தரிசனத்திற்கான அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழா நேரங்களில் அதனை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

பக்தர்களுக்கு கடற்கரையில் நீராடவும், நாழி கிணற்றில் தீர்த்தம் தெளித்தல் மற்றும் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்கவும் அனுமதி இல்லை. மதிய அன்னதானம் பொட்டலங்களாக வழங்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
The administration of Thiruchendur Subramania Samy Temple has announced that Sami darshan can be done only after registering online and getting a permit. The permit can be obtained by booking from the official website of the temple from tomorrow, the temple administration said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X