For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஐடி நுழைவுத் தேர்வு: தேர்ச்சியில் 14வது இடத்தில் தமிழகம்... 2.5% மாணவர்களே தேர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: ஐஐடி கல்வி நிலையங்களில் படிப்பதற்காக நடத்தப்பட்ட ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழகம் 14வது இடத்தில் உள்ளது. மேலும் ஐஐடியில் சேர தமிழகத்திலிருந்து 2.5 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2014-15ம் கல்வியாண்டில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான முதல்நிலை நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 6ம் தேதி நடை பெற்றது. இந்திய அளவில் 13 லட்சத்து 60 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற இத்தேர்வின் முடிவுகள் கடந்த சனிக்கிழமை அன்று வெளியிப்பட்டது. அதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவர்களில் தமிழக மாணவர்கள் மிகவும் குறைவு என்பது கவலை தருவதாக அமைந்துள்ளது.

ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு...

ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வு...

என்ஐடி, ஐஐடி மற்றும் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு தான் ஜெ.இ.இ. மொத்தம் 360 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இரண்டு வகைத் தேர்வுகள்...

இரண்டு வகைத் தேர்வுகள்...

ஜே.இ.இ. தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்துகிறது. இதில் முதலில் முதல்நிலைத் தேர்வும் (மெயின்) பின்னர் முதன்மைத் தேர்வும் (அட்வான்ஸ்) நடத்தப்படும்.

14வது இடத்தில் தமிழகம்...

14வது இடத்தில் தமிழகம்...

மொத்தம் பாஸானவர்களில் 2.5 சதவீதம் தான் தமிழகத்தை சேர்ந்தவர்களாம். இதனால், தேர்ச்சி விகித பட்டியலில் தமிழகம் 14வது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில்...

முதலிடத்தில்...

மொத்தம் 21,818 மாணவர்கள் தேர்வாகி இந்தப் பட்டியலில் ஆந்திரா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில்...

இரண்டாவது இடத்தில்...

அதற்கு அடுத்த இடத்தில் 19,409 மாணவர்களோடு உத்தரப்பிரதேசம் இரண்டாவது இடத்திலும், 16,867 மாணவர்களோடு ராஜஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

குஜராத்தில்...

குஜராத்தில்...

அதற்கடுத்ததாக மகாராஷ்டிராவில் 13,626 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பீகாரில் 10,987 பேரும், குஜராத்தில் 10,037 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பீகாரை விட மோசமான இடத்தில் தமிழகம்...

பீகாரை விட மோசமான இடத்தில் தமிழகம்...

தமிழகத்தில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது மிகவும் பின் தங்கிய பீகார் கூட நமக்கு மேலே நல்ல இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடத்திட்டம் தான் காரணம்...

பாடத்திட்டம் தான் காரணம்...

குறைவான மாணவர்களே இத்தேர்வில் வென்றதற்கு நமது பாடத்திட்டமே என குற்றம் சாட்டுகின்றனர் இத்தேர்விற்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள்.

English summary
A mere 2.5% of those in the race for the coveted IIT seats are from Tamil Nadu this year. It is 14th on the list of the states in the terms of the number of students who have qualified for JEE (Advanced) 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X