For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி 7 வங்கிகளின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் மட்டுமே ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு?

இனி 7 வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் மட்டுமே ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: இனி 7 வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் மட்டுமே ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று ஐஆர்சிடிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, அனைத்து வகை கிரெடிட் மற்றும் டெபிட் வங்கிகளின் அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

Only 7 banks credit and debit cards are allowed for ticket reservation through Internet

ஆனால் இனி குறிப்பிட்ட 7 வங்கிகளின் கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. அதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஆக்ஸிஸ் ஆகிய 7 வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் மட்டுமே இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என ஐஆர்சிடிசி அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் வெளியானது.

மேற்கண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்காதவர்கள் நெட்பேங்கிங் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து ஐஆர்சிடிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

English summary
Sources says that IRCTC stops debit card payment option for several banks in Train ticket booking. Only 7 bank's credit and debit cards are allowed. Other banks may use Internet banking option for ticket booking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X