For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபரேஷன் ராவணா: தமிழ்நாட்டிற்கு ரஜினி.. கேரளாவிற்கு மோகன்லால்.. பாஜகவின் அதிரடி திட்டம்!

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வெற்றி பெற பாஜக சில நடிகர்களின் துணையை நாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ்நாட்டிற்கு ரஜினி...கேரளாவிற்கு மோகன்லால்..வீடியோ

    சென்னை: தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் வெற்றி பெற பாஜக கட்சி சில நடிகர்களின் துணையை நாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதற்காக இரண்டு மாநிலத்தில் உள்ள முன்னணி நடிகர்களை பாஜக தேசிய தலைமை விரைவில் சந்திக்க உள்ளது. அதன் முதற்கட்டமாக, ரஜினியையும், மோகன்லாலையும் பாஜக தங்கள் கட்சிக்குள் இழுக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

    ஏற்கனவே சில நாட்களுக்கு முன் மலையாள நடிகர் மோகன்லால் பிரதமர் மோடியை சந்தித்தார். இது அந்த மாநிலத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது.

    ஆபரேஷன் ராவணா என்றால் என்ன?

    ஆபரேஷன் ராவணா என்றால் என்ன?

    தென்னிந்தியாவில் வெற்றிபெறுவதற்காக பாஜக வைத்து இருக்கும் திட்டம்தான் ஆபரேஷன் ராவணா என்று சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. அதன்படி, வெற்றியை ருசிக்க முடியாத தென்னிந்தியாவில் வெற்றி பெறும் வகையில் அரசியல் சூழ்நிலையை மாற்ற இந்த திட்டத்தை பாஜக கையில் எடுத்து இருப்பதாக சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது. இதன் பணிகள் இப்போது அதிரடியாக தொடங்கி இருக்கிறது.

    இரண்டு மாநிலம்

    இரண்டு மாநிலம்

    தென்னிந்தியாவில் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் எப்போது வேண்டுமானாலும் வென்று விடலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் பாஜகவிற்கு பெரிய பிரச்சனையே தமிழகமும், கேரளாவும்தான். இந்த இரண்டு மாநிலங்களில் வெற்றிபெறத்தான் பாஜக நடிகர்களின் துணையை நாட உள்ளது. இரண்டு மாநிலத்திலும் பிரபலமாக உள்ள நடிகர்களை இதற்காக பாஜக சந்திக்க உள்ளது.

    கேரளாவில் யார்

    கேரளாவில் யார்

    அதன் ஒரு கட்டமாக முதலில் கேரளாவில் வெற்றியை ருசிக்க, நடிகர் மோகன்லாலை பாஜக துணைக்கு அழைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எவ்வளவு ரசிகர் படை இருக்கிறதோ அதே படை, மோகன்லாலுக்கு கேரளாவில் இருக்கிறது. மம்முட்டி கம்யூனிஸ்ட் அபிமானி என்பதால், பாஜக மோகன்லாலை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. மோடியும், மோகன்லாலும் சில நாட்களுக்கு முன் சந்தித்தது இந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

    ரஜினி சந்திப்பு

    ரஜினி சந்திப்பு

    அதே சமயத்தில்தான், தற்போது ரஜினி அமித் ஷா சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் வடஇந்திய ஊடகங்கள் இதுகுறித்து நிறைய செய்திகள் வெளியிட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற ரஜினியை துணைக்கு அழைக்க பாஜக முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Operation Ravana: BJP plan with Rajini and Mohanlal to grap the South India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X