For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாவ்.. செல்பி கேமரா போன் உலகில் புரட்சி ஏற்படுத்தும் ஓப்போ!

இந்த மாதம் 26ம் தேதி வர இருக்கும் ஓப்போ எஃ7 மாடல் போன் செல்பி கேமரா போன் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை: கடந்த ஐந்து வருடங்களில் செல்பி எடுக்க உதவும் ஸ்மார்ட் போன்கள்தான் வைரலாக இருக்கிறது. முன் பக்கம் கேமரா கொண்ட, அதிக திறன் உள்ள செல்பி கேமரா போன்களே அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. செல்பி எடுக்க உதவும் போன்களில் முன் பக்கம் இரண்டு செல்பி கேமராக்களுடன் தற்போது வந்து இருக்கும் ஸ்மார்ட் போன்களே அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது.

நம்மை நாமே போட்டோ எடுத்துக் கொள்வதும், நம்முடைய சிறந்த போட்டோக்களை மற்றவர்களிடம் காட்டுவதும் அதிகரித்துவருகிறது, இதனால் ஸ்மார்ட் போன்களில் செல்பி கேமராக்களின் தேவையும் அதிகம் ஆகியுள்ளது. அந்த வகையில் செல்பி எடுக்க உதவும் ஸ்மார்ட் போன்களில் சீன நிறுவனமான ஓப்போ மொபைல் நிறுவனம் சிறந்த இடத்தில் இருக்கிறது. கடந்த வருடங்களில் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க ஓப்போ மிகவும் சிறந்த மொபைல் நிறுவனமாக வலம் வருகிறது.

 OPPOs Journey Towards Redefining Selfies In Smartphones

ஓப்போ மொபைல் செல்பி எடுப்பதை ஊக்குவிப்பதாலும், தன்னை தானே புகைப்படம் எடுக்க அதிகம் உதவுவதால் ஸ்மார்ட் போன் உலகில் வேகமாக வளர்ந்து இருக்கிறது. சுழலும் 13 எம்பி கேமராக்களுடன் 2013ல் ஓப்போ என்1 மாடல் என்ற மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.முன்பக்க கேமரா, பின்பக்க கேமரா இரண்டும் இதில் மிக சிறப்பாக செயல்படுகிறது. அதேபோல் முழுக்க முழுக்க ஆட்டோமெட்டிக்காக இயங்க கூடிய 16 எம்பி சுழலும் கேமராக்கள் கொண்ட என்3 மாடல் போனை அறிமுகப்படுத்தியது. இதில் கேமராவை தனியாக ரிமோட் மூலம் இயக்கலாம் என்ற வசதியை உருவாக்கி அசத்தியது.

அதற்கு அடுத்த சில நாட்களிலேயே 16 எம்பி முன்பக்க கேமரா வசதியுடன் முதல்முறையாக எஃப்1எஸ் மற்றும் எஃப்1எஸ் ப்ளஸ் மாடல் மொபைல்களை அறிமுகப்படுத்தியது. 2012ல் ஓப்போ நிறுவனம் செல்பி உலகை கட்டுக்குள் கொண்டு வந்தது. பியூட்டி 1.0 என்ற போட்டோக்களை அழகாக்கும் வசதி கொண்ட யூ701 மாடல் மொபைலை அறிமுகப்படுத்தி கலக்கியது. தற்போது இருக்கும் ஓப்போ எஃப்3 மற்றும் ஓப்போ எஃப்3 ப்ளஸ் மாடல் மொபைல்களில் பியூட்டி 4.0 எனப்படும் அதிக வசதிகள் கொண்ட அழகாக்கும் அப்ளிகேஷன் இடம்பெற்று இருக்கிறது. இதில் இருக்கும் தொழில்நுட்பம் மூலம் 7 வகைகளில் வித்தியாசமாக போட்டோக்களை அழகாக்க முடியும், 2 விதமான முக கலர்களுக்கு இது மிகவும் சிறப்பாக பயனளிக்கும்.

 OPPOs Journey Towards Redefining Selfies In Smartphones

அந்த சமயத்தில் இருந்து செல்பி போட்டோக்களை விரும்பும் மக்களுக்கு இதுபோன்ற வசதிகளை உருவாக்கி ஓப்போ முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. சாப்ட்வேரில் மட்டும் ஆராய்ச்சி செய்யாமல், ஹார்ட்வேரிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறது. முக்கியமாக கேமராவில் இருக்கும் இமேஜ் சென்சார்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி மொபைல் கேமரா உலகில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. கேமராக்களில் தொடர் மாற்றம் கொண்டு வந்ததன் மூலம் உலக அளவில் விற்பனையில் ஓப்போ முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்த மாதம் 26ம் தேதி வர இருக்கும் ஓப்போ எஃ7 மாடல் போன் செல்பி கேமரா போன் உலகில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்போ எஃ7ல் இருக்கும் 25எம்பி கேமராவினால் அதிக துல்லியமான செல்பி புகைப்படங்களை எடுக்க முடியும். இதில் இருக்கும் இமேஜ் சென்சார்கள் மிகவும் துல்லியமாக புகைப்படம் எடுக்க உதவும். இதில் இருக்கும் சென்சார்கள் திறன் காரணமாக மிகவும் குறைந்த ஒளியிலும், அதிக ஒளியிலும் புகைப்படம் எடுக்க முடியும்.

ஓப்போ எஃ7 மாடல் போனில் இருக்கும் ஏஐ 2.0 பியூட்டி வசதி மூலம் இதில் புகைப்படங்களை இன்னும் எளிதாக அழகாக மாற்றலாம். இதன் மூலம் போட்டோக்களில் இருக்கும் மனிதர்களின் தோல் நிறம், கண்களின் அமைப்பு, முடி என எல்லாவற்றையும் மாற்ற முடியும். மக்களின் நிறம், வயது, பால் பொறுத்து இதில் நிறைய மாற்றங்கள் செய்யலாம். இதில் ஏஐ மூலம் இயங்க கூடிய எடிட்டிங், ஆல்பம் வசதியும் இடம்பெற உள்ளது. மேலும் இதில் நிறைய ஏஆர் ஸ்டிக்கர் வசதியும், கவர் ஷாட் வசதியும் போட்டோக்களை இன்னும் அழகாக மாற்ற உதவும். கவர் ஷாட் என்ற வசதி மூலம் போட்டோக்கள் கலர், உடையின் கலர், பின் பக்கத்தின் கலர் என பலவற்றை மாற்ற முடியும்.

 OPPOs Journey Towards Redefining Selfies In Smartphones

மேலும் இதில் இருக்கும் ஏஆர் ஸ்டிக்கர் வசதி மூலம் செல்பி எடுத்து அதில் முயல் போலவோ, சினிமா நட்சத்திரம் போலவோ எடிட் செய்து சமூக வலைதங்களில் ஷேர் செய்ய முடியும். ஓப்போ எஃ7 மாடல் போன் தற்போது இருக்கும் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டையே மாற்றி அமைக்க இருக்கிறது. ஓப்போ எஃ7 மாடல் போனில் 6.23 இன்ச் பெரிய எச்டி டிஸ்பிளே இருக்கிறது. மேலும் இதில் சூப்பர் புல் -ஸ்கிரீன் 2.0 பேனல் இடம்பெற்று இருக்கிறது. ஸ்கிரீனுக்கும் போனுக்கும் 10.9 சதவிகித இடைவெளி மட்டுமே இருக்கிறது.

இதனால் மொபைலில் கேம் விளையாடும் போதும், வீடியோ எடுக்கும் போதும் அதிக வசதியாக இருக்கும். இந்த ஓப்போ எஃ7 மாடல் போன் சோலார் சிவப்பு, நீலம், மூன் லைட் சில்வர் ஆகிய மூன்று நிறங்களில் வெளிவர இருக்கிறது. இதன் வடிவமைப்பு போன் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்த உள்ளது. இதில் 128 ஜி.பி இன்பில்ட் மெமரி இருக்கிறது. இந்த போன் வரும் மார்க் 6ம் தேதி வெளியாக உள்ளது. இதன் விலை வெளியிடும் நாள் அன்று தெரிவிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X