ஈரோடு மல்லிகா பரமசிவத்தைத் தொடர்ந்து மேலும் சில மேயர்கள் ஓ.பி.எஸ் பக்கம் வர வாய்ப்பு!

இன்று ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம். இதனையடுத்து தொடர்ந்து சசிகலாவின் பலம் சரிந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் பன்னீீர்செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிவருகிறது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் ஆதரவு தமக்கு உள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்து வந்தார். இந்நிலையில் இன்று ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மெரினாவில் தியானத்திற்கு பின்னர் அவருக்கு பலம் கூடிக்கொண்டே போகிறது. சசிகலாவிற்கு பலம் குறைந்து கொண்டே வருகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த பின்னர், ஓபிஎஸ்ஸுன் பலம் இன்னும் கூடிக் கொண்டே போகிறது.

OPS gets the first Mayor as Mallika Paramasivam joins Team OPS

நேற்று முன்தினம் வரை சந்தர்ப்பவாதி ஓபிஎஸ் என்று கூறி வந்த கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் ஆகியோர் நேற்று ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில், இன்று ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதிமுக மேயர்களில் முதலில் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒபிஎஸ்ஸை ஆதரிக்கும் முதல் மேயரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து மேலும் சிலர் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+