For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி கேட்டு மோடியிடம் ஓபிஎஸ் மனு கொடுக்கவே இல்லை... ஆர்டிஐ வீசிய ‘’பாம்”

தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி கோரி மோடியை ஓபிஎஸ் சந்திக்கவில்லை என்கிறது ஆர்டிஐ தகவல்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி கேட்டு மோடியிடம் ஓபிஎஸ் மனு கொடுக்கவே இல்லை..வீடியோ

    சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியிடம் தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி கேட்டு பிரதமர் மோடியிடம் துணை முதல்வர் ஓபிஎஸ் மனு எதுவுமே கொடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவித்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

    அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த நிலையில் ஓபிஎஸ் துணை முதல்வரானார். இருப்பினுன் அமைச்சர்களோடு அமைச்சர்களாகவே நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ் அமர வைக்கப்பட்டார்.

    அத்துடன் துறை சார்ந்த எந்த ஒரு முடிவையும் தன்னிச்சையாக அவரால் எடுக்கவும் முடியவில்லை. இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து முறையிட டெல்லி போய் காத்திருந்து ஏமாந்து திரும்பினார்.

    ஓரம் கட்டப்படுவது குறித்து புகார்

    ஓரம் கட்டப்படுவது குறித்து புகார்

    பின்னர் திடீரென பிரதமர் மோடியின் அப்பாயின்ட்மெண்ட் கிடைத்தது. இதனால் பிரதமர் மோடியை சந்தித்து தாம் ஒதுக்கப்படுவது குறித்து முறையிட்டிருந்தார்.

    சமாளித்த ஓபிஎஸ்

    சமாளித்த ஓபிஎஸ்

    ஆனால் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழகத்துக்கு கூடுதல் நிலக்கரி ஒதுக்கவே பிரதமர் மோடியிடம் மனு கொடுத்ததாக ஓபிஎஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக பத்திரிகை செய்தி ஒன்றும் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் அப்போதே சர்ச்சையானது.

    ஆர்டிஐ மூலம் கேள்வி

    ஆர்டிஐ மூலம் கேள்வி

    டெல்லி சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடியாரும் ஓபிஎஸ்ஸும் திடீரென இணைந்து அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் சஞ்சய்காந்தி என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அக்டோபர் 12- ந்தேதியன்று டெல்லியில் பிரதமர் மோடியிடம் ஓபிஎஸ் அளித்த மனு பற்றிய விவரம் கேட்டிருந்தார்.

    புதிய சர்ச்சை

    புதிய சர்ச்சை

    ஆனால் பிரதமர் அலுவலகமோ அப்படி ஒரு மனுவே தங்களிடம் இல்லை என தெரிவித்துவிட்டது. இதனால் பிரதமர் மோடியிடம் மனு கொடுத்ததாக ஓபிஎஸ் கூறியது சர்ச்சையாகி உள்ளது.

    English summary
    According to the RTI Information that TamilNadu Deputy CM O Panneerselvam meeting with PM Modi at Delhi for not the excess coal to the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X