For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.சமாதியில் மீண்டும் ஓ.பி.எஸ்.. தீபாவும் வந்து சேர்ந்ததால் புதிய பரபரப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்தார். அங்கு தீபாவும் அவருடன் இணைந்து கொண்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு வார இடைவெளியில் இன்று மீண்டும் ஜெயலலிதா சமாதிக்கு வந்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அங்கு வந்துள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லப் போகிறார். இந்த நிலையில் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி இரு தரப்பும் செயல்பட ஆரம்பித்து விட்டது. இந்தப் பின்னணியில், இன்று இரவு திடீரென முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினவிடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் வந்த சிறிது நேரத்தில் தீபாவும் அங்கு வந்ததால் புதிய பரபரப்பு ஏற்பட்டது.

OPS visits Jaya samathi, Deepa joins him

தீபாவை முதல்வர் வரவேற்று நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். தீபாவை முன்னால்நடக்க விட்டு விட்டு முதல்வர் உள்ளிட்டோர் பின்னால் நடந்து வந்தது பல குறியீடுகளை உணர்த்துவாக உள்ளது.

அடுத்து ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் செல்லவுள்ளதாக தெரிகிறது. அவருடன் தீபாவும் செல்வாரா என்பதுதான் இப்போதைய பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
CM O Panneerselvam paid a visit to late Jayalalitha samathi this night. Where, Deepa joined him later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X