For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூர் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்: உறுப்பு தானத்தால் எட்டு பேர் மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் 8 பேருக்கு தானம் அளிக்கப்பட்டுள்ளது.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதால் எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மி பாளையத்தை சேர்ந்தவர் கோமதி. இவர் கடந்த நான்காம் தேதி பணி முடிந்து இரவு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, திடீரென ஏற்பட்ட விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

Organ donate is 8 people in Kovai

மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் உறுப்புகளை பிரித்தெடுக்கும் அறுவை சிச்சை நடைபெற்றது. அதில் கல்லீரல், சிறுநீரகம், இருதயம், எலும்பு மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இதன் காரணமாக எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.

English summary
Gomti was admitted to the kovai hospital for treatment due to severe head injuries. But the doctors said that she had brain death, The subsequent surgery included organs including liver, kidney, heart, bone and skin to the hospital in Coimbatore and Chennai. Because of this, eight people have been rehabilitated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X