For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாகன ஓட்டிகளே... அசல் டிரைவிங் லைசென்ஸ் செப்.1 முதல் அவசியம் - வீடியோ

வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற விதி செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை மறுநாளில் இருந்து அமுலுக்கு வருகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம். லைசென்ஸ் இல்லாதவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை என்று போக்குவரத்துத்துரை அமைச்சர் அறிவித்தது நாளை மறுநாள் செப்டம்பர் 1 முதல் அமுலுக்கு வருகிறது.

தமிழகத்தில் அதிகம் விபத்து ஏற்படுவதற்கான காரணத்தை தன் துறை சார்ந்த அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் விவாதித்தார்.

Original driving license is mandatory from 1st septemper

அதில் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல், காலாவதியான லைசென்ஸ் வைத்து வாகனம் ஓட்டுவது கூட விபத்துக்குக் காரணம் என கூறப்பட்டது. அதாவது டிரைவிங் லைசென்ஸின் ஜெராக்ஸ் காப்பியை காண்பிப்பதால் அது காலாவதியானது தெரிவது இல்லை.

ஆகையால், வண்டி ஓட்டும்போது வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்காதவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்த விதி நாளை மறுநாளிலில் இருந்து அதாவது செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து அமுலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vehicle owners and drivers who driving their vehicle must have original driving license announced minister M.E.Vijayabaskar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X