For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பகோணம் மகாமகம்: 5 நாளில் 10.60 லட்சம் பேர் புனித நீராடல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் மகாமகம் திருவிழாவில் 5ம் நாளான நேற்று 1 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர். 5 நாட்களில் 10.60 லட்சம் பேர் நீராடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கும்பகோணம் மகாமகம் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாளில் மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் நீராடினர்.

2வது நாளான ஞாயிற்றுக்கிழமை ரத சப்தமி நாள் என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வட மாநிலங்களை சேர்ந்தவர்களும் நீராட வர தொடங்கினர். திருவிழாவின் 3வது நாளிலிருந்து வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

திங்கட்கிழமை ஏராளமான வேத விற்பன்னர்கள் குளத்தில் புனித நீராடிய பின்னர் பீஷ்மதர்ப்பணம் செய்தனர். செவ்வாய் கிழமையும் இதே போன்று கூட்டம் காணப்பட்டது. இதன்பின்னர் 5ம் நாளான நேற்று காலை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால் மதியம் முதல் பக்தர்களின் கூட்டம் அதிகமானது.

10.60 லட்சம் பேர் நீராடல்

10.60 லட்சம் பேர் நீராடல்

ஒவ்வொரு கிணறுகளிலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கிணறுகளிலிருந்து தண்ணீரை எடுத்து பக்தர்கள்மேல் தெளித்து விரைவாக வெளியேற்றினர். நேற்று ஒரு நாள் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடினர். மகாமக திருவிழா தொடங்கி 5 நாட்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று மாலை வரை மகாமக குளத்தில் 10.60 லட்சம் பேர் நீராடி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனித தீர்த்த கிணறுகள்

புனித தீர்த்த கிணறுகள்

மகாமகம் குளத்தில் 20 புனித தீர்த்த கிணறுகள் உள்ளன. ஒவ்வொரு புனித தீர்த்த கிணறுகளின் பெயர் குறித்து பக்தர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பிரம்ம தீர்த்தம் கிணற்றில் வைக்கப்பட்டிருந்த போர்டு நேற்று திடீரென சரிந்தது. இதனால் அதை தீயணைப்பு வீரர்கள் கழற்றி கரையின் அருகே வைத்தனர். பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

வெள்ளி பல்லக்கில் வீதியுலா

வெள்ளி பல்லக்கில் வீதியுலா

மகாமக பெருவிழாவின் பிரதான கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் விழாவின் 5ம் நாளான நேற்று காலை சுவாமி, அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதியுலா வந்தனர்.பின்னர் மதியம் சுவாமி தன்னைத்தானே பூஜிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஓலைச்சப்பரத்தில் பவனி

ஓலைச்சப்பரத்தில் பவனி

அதனைத்தொடர்ந்து, இரவு சுவாமி, அம்பாள் தனித்தனி ஓலைசப்பரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

English summary
Over 10.60 lakh visitors reached Kumbakonam Mahamaham Festival in five days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X