For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக- தோலுரித்து காட்டிய ப.சிதம்பரம்

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 12 பேரை கொன்றதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் ஒரே கட்சி பாஜக என்பதால், தமிழக அரசை யார் இயக்குகிறார்கள் என்பது தெரிந்துவிட்டது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    P Chidambaram, condemned the Tuticorin gunfire

    இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டுகளில் கூறியுள்ளதாவது:

    தூத்துக்குடி பெருந்துயரத்திற்கு யார் காரணம்? 1. சிந்தனையும் செயலும் இழந்த மாநில அரசு. 2. சீரிய தலைமையும் போதிய பயிற்சியும் இல்லாத காவல் துறை.

    காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஒரே அரசியல் கட்சி பாஜக. தமிழ் நாடு அரசை யார் நடத்துகிறார்கள் என்று இப்பொழுது தெரிகிறதா?

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்த வர்களுக்கு என்னுடைய ஆறுதல் மற்றும் பூரண குணமடைய வாழ்த்து. இவ்வாறு ப.சிதம்பரம் தனது டுவிட்டுகளில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Former Union Minister and one of the senior leaders of the Congress party, P. Chidambaram, condemned the Thoothukudi gunfire.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X