For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

’என்னாது.. ஒரு காபி விலை 180 ரூபாய், டீ விலை 135 ரூபாயா... ’ : அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம்

சென்னை விமானநிலையத்தில் விற்கப்படும் டீ,காபி விலையைக் கேட்டு அதிர்ச்சியடந்ததாக ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    காபி, டீ விலையை கேட்டு அதிர்ச்சியடைந்த ப.சிதம்பரம்- வீடியோ

    சென்னை : சென்னை விமான நிலையத்தில் டீ, காபி விலையைக் கேட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் அதிர்ந்து போய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

     P Chidambaram horrified after hearing Tea Coffee Price

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி டே கடையில் டீ கேட்டபோது, சுடு தண்ணீரையும், டீத்தூளையும் தனித்தனியாக கொடுத்தார்கள். அதற்கு 135 ரூபாய் விலை சொன்னார்கள். நான் அதிர்ந்து போய் டீ வேண்டாமென்று மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா தவறா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும், மற்றொரு பதிவில், காபி விலையைக் கேட்டேன் 180 ரூபாய் என்று பதில் வந்தது. யார் இதை வாங்குவார்கள் என்றதற்கு, அவர்கள் 'பலர்' என்று பதில் அளித்தனர். அப்போது, நான் பழையவனாகிவிட்டோனோ ? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

    முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஒருவர், இவ்வாறு பதிவிட்டு இருப்பது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பலரும் இதை ரீட்வீட் செய்துவருகிறார்கள்.

    English summary
    Former Central Finance minister P Chidambaram says in a tweet that, He is shocked and horrified after hearing the Coffee and Tea price at Chennai Airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X