For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை எந்த காலத்திலும் விற்காத விலைக்கு விற்பனை... ப.சிதம்பரம் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை எந்த காலத்திலும் விற்காத விலைக்கு விற்கப்படுகின்றன என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த காலத்திலும் விற்காத விலைக்கு விற்கப்படுவதாக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

அண்மைகாலமாக பெட்ரோல், டீசலின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல் , டீசல் விலையுயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

P.Chidambaram says about Petrol and Diesel price hike

இதுகுறித்து ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எண்ணெய் என்பது இந்திய பொருளாதாரத்தின் முக்கிய காரணியாகும். 80 சதவீத எண்ணெய் உற்பத்தியை இந்தியா சார்ந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் மத்திய அரசு பட்ஜெட்டும் அதன் அடிப்படையில் குறைந்த அளவில் இருந்தது.

குறைவான எண்ணெய் விலை வரியை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுவதற்கு பாஜக கூட்டணி அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகோலியது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையுயர்வு சுமை மக்கள் மீது ஏற்றப்பட்டுவிட்டது. 4 ஆண்டு பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீது சுமத்தப்பட்ட கூடுதல் வரிச்சுமை ரூ 6 லட்சம் கோடி ஆகும்.

பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு கொஞ்சம் கூட நிவாரணம் கிடையாது. ரூ 6 லட்சம் கோடியில் ஒரு பகுதியை நிவாரணமாக மக்களுக்குத் தந்திருக்க வேண்டுமா இல்லையா?

கச்சா எண்ணை விலை குறைகிறது, ஆனால் மக்களுக்கு வரிச்சுமை கூடுகிறது. இன்று பெட்ரோல், டீசல் எந்தக் காலத்திலும் இல்லாத விலைக்கு விற்கின்றன என்று தனது டுவிட்டரில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

English summary
P.Chidambaram says that When crude oil prices collapsed in 2014 and brought a windfall, the Central Budget was based on low prices. Low oil prices gave room to the BJP-NDA government and state governments to tax the consumer to the hilt and garner large resources without fuelling inflation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X