For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் சபாநாயகர் பி எச் பாண்டியன் மனைவி சிந்தியா மறைவு

தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியன் உடல்நலக்குறைவினால் இன்று காலமானார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் மனைவி சிந்தியா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்தவர். சிந்தியா பாண்டியன் தமிழ்நாடு உயர்கல்வி ஆணையத்தின் ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.

P.H. Pandian wife passes Cynthia Pandian away

கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தார் சிந்தியா பாண்டியன். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்தியா பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சிந்தியா பாண்டியன் பி.எச்டி முடித்தவர். நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக 2005 முதல் 2008 வரை பணியாற்றியவர்.

இவருக்கு மனோஜ் பாண்டியன், அரவிந்த பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மகன் மனோஜ்பாண்டியன் 2001ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக சேரன்மகாதேவி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரும் தந்தையை போலவே பல்வேறு திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றியுள்ளார். 2006ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங் வேட்பாளர் வேல்துரையிடம் போ்ட்டியிட்டு தோல்வியடைந்தார். ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகித்துள்ளார் மனோஜ் பாண்டியன்.

அதிமுக ஆட்சியின்போதுதான் 2005ம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக்கத்தில் துணை வேந்தராக சிந்தியா பாண்டியன் அறிவிக்கப்பட்டார்.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலின்போது சிந்தியா பாண்டியனுக்கு தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை ஜெயலலிதா அளித்திருந்தார். ஆனால், சிந்தியா பாண்டியன் வெற்றி பெறவில்லை. இவரது மற்றொரு மகன் அரவிந்த் பாண்டியன் கூடுதல் அட்டர்னி ஜெனரலாகவும் இருந்தார்.

English summary
Dr. Cynthia Pandian wife of former assembly speaker Dr. P.H. Pandian died at a private hospital in Chennai early Sunday morning, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X