For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் திடீர் கைது...ஏன்?

கும்பகோணம் கதிராமங்கலத்தில் நடைபெறும் மீத்தேன் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மற்றும் காவிரி உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்களை போலீசார் கைத

By Suganthi
Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் கதிராமங்கலத்தில் மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகளும் பொதுமக்களும் நடத்திவரும் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மற்றும் காவிரி உரிமை மீட்புக் குழுவினரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அமல்படுத்த தயாராகி வருகிறது. அதனைக் கண்டித்து விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

P.Maniyarasan arrested when he was going to participate in methane protest

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் மற்றும் காவிரி உரிமை மீட்புக்குழுவினரின் வாகனத்தை மறித்து கும்பகோணம் அருகில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாநில அரசு மத்திய அரசின் ஏவலாள் போல் செயல்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொருவராக கைது செய்து வருகிறது. இந்த கைது நடவடிக்கைகள், நெடுவாசல் போராட்டத்துக்கான ஒரு முன்னோட்டம் என கூறினார். மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறிய மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்தது குறிப்பிடத்தகக்து.

English summary
Tamil desiya periyakkam Leader P.Maniyarasan arrested when he was going to participate in methane protest in Kumbakonam Kathiramangalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X