For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர் பி.வி. ரமணா டிஸ்மிஸ்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து பி.வி. ரமணா நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கே.ரோசய்யா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ப.மோகன் பால் வளத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்று ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

P.v. ramana relieved from minister post

மேலும் , திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் ரமணா நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்புக்கு வேறு ஒருவரை நியமனம் செய்யப்படும் வரை மாவட்ட கழகப் பணிகளை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வாலாஜபாத் பா.கணேசன் எம்எல்ஏ கூடுதலாக மேற்கொள்வார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையிலிருந்து 2வது முறையாக ரமணா நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ரமணா ஒரு பெண்மணியுடன் இருப்பது போன்ற புகைப்படம் வாட்ஸ் ஆப்பில் வெளியாகியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.

English summary
Tn cm has announced P.v. ramana relieved from minister post
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X