For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டையில் பலத்த மழை.. நெற்பயிர்கள் நாசம்

Google Oneindia Tamil News

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில் வயல் வெளிகளில் மழை நீர் வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கி் போய் விட்டன.

Paddy fields submerged in Senkottai

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியான செங்கோட்டை தாலுகா மேக்கரை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் தற்போது நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. விடாமல் பெய்த தொடர்மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும், இப்பகுதியில் உள்ள எருமைசாவடி என்ற பகுதியிலிருந்த தடுப்பணை உடைந்து வயல்வெளிக்குள் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் செங்கோட்டை தாசில்தார் சங்கரலிங்கத்திடம் புகார் தெரிவித்தனர்.

Paddy fields submerged in Senkottai

இதனைத் தொடர்ந்து தாசில்தார் சங்கரலிங்கம் தலைமையில், வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி, வேளாண்மை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று சேதப்பகுதிகளை பார்வையிட்டனர்.இன்று சேதமடைந்த பகுதிகளை நேரில்கள ஆய்வு சேதமதிப்பை அளவீடு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Paddy fields submerged in Senkottai

புளியரை கிராமம் பகவதிபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்ப்பட்டு சிறு சிறு சேதங்கள் மற்றும் வயல் வெளிகளுக்குள் கால்வாய்கள் உடைப்பு ஏற்ப்பட்டு வெள்ளம் புகுந்தது.இதனால் எராளமான விளை நிலங்கள் பாதிக்கப் பட்டன. இந்நிலையில் காட்டாற்று வெள்ளம் காரணமாக காட்டுக்குள் இருந்த சுமார் 3 வயது மதிக்கத் தக்க காட்டு பன்றி ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இன்று கரை ஒதுங்கிய நிலையில் புளியரை சித்தாறில் கிடந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் அந்த பன்றியின் உடலை பார்வையிட்டு கைப்பற்றி வனப் பகுதியில் புதைத்தனர்.

English summary
Acres of paddy fields are submerged in Senkottai due to the heavy rain lashing there for the last few days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X