For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்டிகரணம் போட்டாலும், பாகிஸ்தானால் நம்முடைய புதிய ரூபாய் நோட்டுகளை காப்பியடிக்க முடியாது!

புதிய இந்திய ரூபாய்த் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால் பாகிஸ்தான் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடியாது என உளவுத்துறை தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி : இந்திய ரூபாய் நோட்டுகள் போல பாகிஸ்தான் இனி கள்ள நோட்டு தயாரிக்க முடியாது என உளவுத்துறை கூறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் இந்திய ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள ரூபாய் நோட்டுகளை அந்நாட்டின் பெஷாவரில் அச்சடித்து வந்தது.

pakistan can't copy new currency notes : intelligence agency

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் லஷ்கர் இ தொய்பா உதவியுடன் பாகிஸ்தான் இந்த வேலையை செய்து வருகிறது. மேலும் ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் மேல் இந்தியாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்து வருகிறது.

இவற்றில் பெரும்பாலானவை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தான்.

pakistan can't copy new currency notes : intelligence agency

நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக இருந்த கள்ள நோட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த மத்திய அரசு நேற்று முன் நாள் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.

திடீரென வந்த இந்த அறிவிப்பு மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது.மிகக் குறுகிய கால அவகாசத்தில் இந்த அதிரடி அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததால் மக்கள் சில அவதிக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் பல புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தான் குட்டிகரணம் போட்டாலும் காப்பியடிக்க முடியாது என உளவுத்துறை தெரிவித்துள்ளது.கள்ள நோட்டு அச்சடிக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ரூபாய் நோட்டுகளின் வரவால் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் உளவுத்துறை அறிவித்துள்ளது.

மத்தியரசின் இந்த நடவடிக்கையால் அதிர்ந்து போன பாகிஸ்தான் தற்போது இந்திய ரூபாய் போல் கள்ள நோட்டுக்களை எப்படி அச்சடிப்பது என வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது.

English summary
the new notes of Rs 2000,500 asserting that its security features will be next to impossible to replicate for pakistan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X