For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக இணையதளத்தை குதறிப் போட்ட பாக். ஹேக்கர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஹேக் செய்து விஷமத்தனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக உலகப் புகழ் பெற்ற விஷயங்கள் மீதுதான் ஹேக்கர்கள் கை வைப்பார்கள். ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் இணையதளத்தை ஹேக் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

அதிமுக இணையதளம்

அதிமுக இணையதளம்

அதிமுக தனக்கென ஒரு இணையதளத்தை வைத்துள்ளது. அதன் பெயர் www.aiadmkallindia.org என்பதாகும்.

சனிக்கிழமை நடந்த திருவிளையாடல்

சனிக்கிழமை நடந்த திருவிளையாடல்

இந்த இணையதளமானது, சனிக்கிழமையன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஹாக்ஸர்ஸ்...

பாகிஸ்தான் ஹாக்ஸர்ஸ்...

பாகிஸ்தான் ஹாக்ஸ்ர்ஸ் க்ரூ என்ற பெயரிலான ஒரு ஹேக்கர் குழு இந்த விஷமத்தை செய்தது.

மண்டை ஓட்டுப் படம்

மண்டை ஓட்டுப் படம்

ஹேக் செய்யப்பட்ட தளத்தில் மண்டை ஓட்டுப் படத்தையும், பாகிஸ்தான் தேசியக் கொடியையும் இவர்கள் போட்டு வைத்தனர். மேலும், இஸ்லாம் வாழ்க, முஸ்லீம்கள் வாழ்க, பாகிஸ்தான் வாழ்க என்ற வாசகங்களையும் போட்டு வைத்திருந்தனர். மேலும், "HACKED BY H4$N4!N H4XOR என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.

நீதி, அமைதி தேவை

நீதி, அமைதி தேவை

மேலும் எங்களுக்கு நீதியும், அமைதியும் தேவை என்றும், ஒரு இமெயில் ஐடியும் அதில் இடம் பெற்றிருந்தது. மேலும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் ஸ்க்ரோல் செய்திருந்தனர்.

சுதாரித்த அதிமுக

சுதாரித்த அதிமுக

தற்போது இந்த இணையதளத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. "This Account Has Been Suspended" என்ற வாசகம் மட்டும் இடம் பெற்றுள்ளது.

ஹேக் செய்யப்பட்டது உறுதி

ஹேக் செய்யப்பட்டது உறுதி

அதிமுகவின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை சென்னை காவல்துறையும் உறுதி செய்துள்ளது. சென்னை காவல்துறையின் சைபர் குழு தற்போது இணையதளத்தை முடக்கியுள்ளதாம்.

ஜெயா டிவியின் இணையதளத்திலும் விஷமம்

ஜெயா டிவியின் இணையதளத்திலும் விஷமம்

இதேபோல ஜெயா டிவியின் www.jayatv.tv இணையதளமும் ஹேக் செய்யப்பட்டு அதில் ஒரு பாடலை போட்டுள்ளனர் ஹேக்கர்கள்.

அதிமுகவிலிருந்து பதில் இல்லை

அதிமுகவிலிருந்து பதில் இல்லை

இந்த ஹேக்கிங் குறித்து அதிமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவித விளக்கமோ, பதிலோ இதுவரை வெளியிடப்படவில்லை.

English summary
The official website of the All India Anna Dravida Munnetra Kazhagam, www.aiadmkallindia.org, was on Saturday hacked by a group which calls itself Pakistan Haxors Crew. The group posted a symbol featuring a skull and the Pakistan flag and posted messages like “Islam Zindabad , Long Live Muslims , Pakistan Zindabad” and “HACKED BY H4$N4!N H4XOR”. The official website of the party’s TV channel www.jayatv.tv also displayed the same screen, playing a song uploaded by hackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X