For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவல்துறை கட்டுப்பாட்டில் பழனி முருகன் சிலை!

பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு காரணமாக பழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைப்பு- வீடியோ

    பழனி: பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு காரணமாக பழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதால், கும்பகோணம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு இப்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது,. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு இதில் சாட்டையை சுழற்றி இருக்கிறது. பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. இந்த சிலையில் சேதம் ஏற்பட கூடாது என்று புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டது.

    Palani Murugan Temple Idol scam case: Main Idol handed over to police

    இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி ஐம்பொன் சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இதை வெளிக்கொண்டு வந்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக பழனி முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க கும்பகோணம் நீதிமன்றம் கூறியது. பழனி போலீசுக்கு இதற்காக ஆணையிட்டது.

    இந்த நிலையில் இன்று காலை சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினரிடம் பழனி முருகன் சிலை ஒப்படைக்கப்பட்டுள்ளது. முருகன் கோயிலின் உற்சவர் சிலையை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் இந்த சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். 2 போலீஸ்கார்கள் பாதுகாப்புடன் முருகன் சிலை கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    English summary
    Palani Murugan Temple Idol scam case: Main Idol handed over to police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X