• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தஞ்சாவூரில் டி.ஆர். பாலு உருவபொம்மை எரிப்பு- பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

Palanimaanickam supporters upset over TR Balu
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதியை பறித்துக் கொண்ட திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் இன்று தஞ்சாவூரில் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பழனி மாணிக்கம். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர். பாலு. ஆனால் இம்முறை எப்படியும் தஞ்சாவூர் தொகுதியை வாங்கி விடுவது எனில் தொடக்கம் முதல் மும்முரமாக இருந்தார் டி.ஆர் .பாலு. இதில் பழனி மாணிக்கம் மிகவும் அதிருப்தி ஆனார்.

இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. இதில் திமுக தலைமையே பஞ்சாயத்து செய்தும் வைத்தது. இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக டி.ஆர். பாலு பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பழனி மாணிக்கம் ஆதரவாளர்கள் கொந்தளித்துப் போயினர். தஞ்சாவூர் நகரில் பல இடங்களில் டி.ஆர். உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். திமுகவினர் இந்த போராட்டம் அக்கட்சி தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

English summary
DMK Senior leader and Former Union Minister S.S Palanimanickam supporters very upset and burn effigy of another DMK leader TR Balu over the Lok Sabha seat row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X