For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளுநரைத்தான் கைது செய்து விசாரித்திருக்க வேண்டும்.. பண்ருட்டி வேல்முருகன் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: நிர்மலா தேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய காவல்துறை, நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

நிர்மலாதேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய தமிழக காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்திருக்கிறது! அதுவும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுநரே புகார் கொடுத்து அதன்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கோபால்!

Panruti Velmurugan condemns Nakkheeran Gopal arrest

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசைத்திருப்பவே இந்தக் கயமைத்தனத்தில் இறங்கியுள்ளார் ஆளுநர்!

கல்லூரி மாணவிகளை பாலியல் விவகாரத்திற்கு அழைத்ததற்கான வழக்கில் நிர்மலாதேவி மீது விசாரணை நடந்துவருகிறது. அந்த நிர்மலாதேவி ஆளுநரை நான்கு முறை சந்தித்ததாகக் கூறியிருந்த செய்தி அண்மையில் ஊடகங்களில் வெளியானது. அத்தகைய ஒரு செய்தி நக்கீரன் பத்திரிகையிலும் வெளியானதை வைத்தே கோபால் கைது செய்யபட்டார் என்று தெரியவருகிறது.

நாம் கேட்பது இதைத்தான்: பத்திரிகையில் ஒருவரைப் பற்றிய செய்தி வந்தால் அந்தப் பத்திரிகை ஆசிரியரை எப்படிக் கைது செய்ய முடியும்? சட்டவிரோதமாக கோபாலை இதற்காக கைது செய்வது என்றால் "குற்றமுள்ள மனது குறுகுறுக்கும்" என்பதாலா?

அதனால்தான் சொல்கிறோம்: நிர்மலாதேவி வழக்கில் ஆளுநரை விசாரிக்க வேண்டிய தமிழக காவல்துறை நக்கீரன் ஆசிரியர் கோபாலைக் கைது செய்திருக்கிறது! அதுவும் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுநரே புகார் கொடுத்து அதன்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார் கோபால்!

[ மாதவரத்தில் அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையம் திறப்பு.. கோயம்பேட்டில் கூட்டம் குறையுமா? ]

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசை திருப்பவே இந்தக் கயமைத்தனத்தில் இறங்கியுள்ளார் ஆளுநர் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
TVK leader Panruti Velmurugan has condemned Nakkheeran Gopal arrest and asked the police to book TN Governor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X