For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குன்னூரில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் அச்சம் - வீடியோ

குன்னூர் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வனத்துறையினர் அதனைப் பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

குன்னூர்: கருஞ்சிறுத்தை ஊருக்குள் இருக்கும் ஆடு, நாய்களை வேட்டையாடுவதால் அதனைப் பிடித்து காட்டுக்குள் விட வேண்டும் என குன்னூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுக்குள் இருந்து வரும் யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பகல் பொழுதுகளிலும் நடமாடி மக்களை அச்சுறுத்தி வந்தன.

Panther is roaming in Conoor areas and threatening people

இந்நிலையில், குன்னூரில் கருஞ்சிறுத்தை ஊருக்குள் வந்து அங்கிருக்கும் ஆடுகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர்.

அதனால் அந்த கருஞ்சிறுத்தையப் பிடித்து காட்டுக்குள்ளோ அல்லது முதுமலை விலங்குகள் சரணாலயத்திலோ விட வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். காடுகள் மற்றும் சோலைகளிலும் வறட்சி நிலவுவதால் பல விலங்குகள் நீரைத் தேடி ஊருக்குள் வருவது சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது.

English summary
In conoor areas black panther is roaming and threatening. So people requested forest department to catch it and send it to Mudumalai sanctuary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X