For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்கிய ஆண் சிறுத்தையுடன் பெண் சிறுத்தையும் வந்ததா?.. நீங்காத பீதியில் மக்கள்!

Google Oneindia Tamil News

நெல்லை: பாளையங்கோட்டை அருகே புகுந்த ஒரு சிறுத்தையால் நெல்லையே அல்லோகல்லப்பட்டுப் போய் விட்டது. அந்த ஆண் சிறுத்தையை கடும் போராட்டத்திற்குப் பின்னர் வனத்துறையினர் மீட்டனர். இந்த நிலையில் அந்த சிறுத்தையுடன் பெண் சிறுத்தையும் வெளியேறி வந்திருக்கலாம் என்று ஒது புதுப் புரளியை சிலர் கிளப்பி வி்ட்டுள்ளனர்.

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ளது திருமால் நகர். ரெட்டியார்பட்டி மலையடிவாரம் அருகே உள்ள நெல்லை மாநகராட்சியின் விரிவாக்க பகுதியான இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இன்று அதிகாலை அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் வாக்கிங் சென்றார். அப்போது அங்குள்ள ஒரு புதர் பகுதியில் இருந்து ஏதோ ஒரு விலங்கு ஒன்று பாய்ந்து ஓடியது.

Panther panic not yet over in Nellai

முதலில் அதனை நாய் என்று நினைத்த அந்த முதியவர் அருகில் சென்று பார்த்த போது அது சிறுத்தை என தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கூறினார். இதையடுத்து அங்கு கூட்டம் திரண்டது. இதைப் பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓட ஆரம்பித்தது.

தகவல் அறிந்து மாவட்ட வன அதிகாரி அம்புரோஸ் தலைமையில் வனச்சரகர் பால்ராஜ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்குமிங்குமாக போக்குக் காட்டி ஓடிய சிறுத்தையை வனத்துறையினரும், இளைஞர் பட்டாளமும் விடாமல் பின் தொடர்ந்து சென்றனர். கடைசியில் அந்த சிறுத்தை பேராசிரியர் சுப்பிரமணியன் என்பவரது வீட்டுக்குள் புகுந்து பாத்ரூமுக்குள் போய் பதுங்கியது.

இதையடுத்து பாத்ரூம் வென்டிலேட்டர் வழியாக சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டனர் வனத்துறையினர். இதில் அது லேசாக மயங்கியது. இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இருந்து இரும்பு கூண்டு கொண்டு வரப்பட்டது. அதனை சிறுத்தை பதுங்கி இருந்த வீட்டிற்குள் கொண்டு செல்ல, அந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் இடித்து உடைக்கப்பட்டது. பின்பு குளியலறையின் கதவை ஒட்டியவாறு இரும்பு கூண்டு இறக்கி வைக்கப்பட்டது.

சிறிது நேரம் கழித்து குளியலறை கதவை திறந்த போது அரைகுறை மயக்கத்தில் இருந்தது சிறுத்தை. மீண்டும் மக்கள் கூட்டத்தைப் பார்த்த சிறுத்தை தப்பி ஓடி முயன்று வெளியேறியது. ஆனால் வைத்திருந்த இரும்புக் கூண்டில் சிக்கிக் கொண்டது. சிறுத்தை பிடிபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் நிம்மதி ஏற்பட்டது.

இந்த சிறுத்தையானது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திலிருந்து தப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்த காப்பகம் உள்ள இடத்திலிருந்து நெல்லை 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் எப்படி இவ்வளவு தூரம் அது பயணித்தது என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது சரக்கு வாகனத்தில் பதுங்கியபடி பயணித்து இது வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கிடையே ஆண் சிறுத்தையுடன் பெண் துணையும் சேர்ந்து வெளியேறியிருக்கலாம் என்றும் புதுப் புரளி கிளம்பியுள்ளதால் மக்களிடம் இன்னும் பீதி முழுமையாக தணியவில்லை.

English summary
People in Nellai, Palayamkottai in particulare are still in the Panther panic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X