For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார் நெல் சாகுபடி- பாபநாசம் அணை இன்று திறப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: கார் நெல் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திறக்கப்படுகிறது. இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலஙகள் பாசன வசதி பெறும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. நெல்லை மாவட்டததின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபநாசம் அணையின் மூலம் நெல்லை மாவட்டத்தின் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகி்ன்றன. இது போல் தூத்துக்குடி மாவட்டததில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

Papanasam dam to be opened today

கடந்த ஆணடு சீசன் காலத்தில் நல்ல மழை பெய்ததால் நெல் சாகுபடி நன்றாக இருந்தது. கார் பருவ சாகுபடி முடந்தவுடன் பாபநாசம் அணை மூடப்படடது. இந்த நிலையில் இந்தாண்டு கார் பருவ சாகுபடிககாக தண்ணீர் திறக்கப்படுமா என கேள்வி குறி எழுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை முன் கார் பருவ சாகுபடிக்காக ஒவவொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு பாபநாசம் அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் முன் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து பொது பணி துறையும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. இந்த நிலையில் முன் கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி இன்று 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் 3ம் நம்பர் நேரடி பாசனம், கடம்பாகுளம், ஆத்தூர் குளம், ஆறுமுகமங்கலம்குளம் பாசனததிற்கு உள்பட்ட 8124 ஏக்கர நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால் விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

English summary
The Papanasam dam in Tirunelveli will be opened today for irrigation purpose.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X