For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 நாட்கள் தொடர் மழை எதிரொலி - நெல்லை அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Google Oneindia Tamil News

நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதரத்துக்கு உறுதுணையாக இருப்பது பாபநாசம் அணை ஆகும். பாபநாசம் அணையின் மூலம் நெலலை மாவட்டத்தின் 40 ஆயிரம் ஏக்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை மூலம் கார் பருவ சாகுபடியும், அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை மூலம் பிசான நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பின.

Papanasam dam water level rose due to heavy rain…

இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது இதில் பாதி நிலங்களில் நெல் அறுவடை முடிநது விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து சராசரியாக 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது. அணை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அங்கிருநது தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது பாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு 79.55, சேர்வலாறு அணையில் 92.75, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89.70 அடியாக உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 46 மிமீ, சேர்வலாறு அணை பகுதியில் 27 மி்மீ, மணிமுத்தாறு அணஐப்பகுதியில் 22 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் இந்த வருடம் பிசான நெல் சாகுபடி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Papanasam dam filled with water due to two days of heavy rain on that Nellai districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X