For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணாடி பாத்திரத்தில் கீறல் விழுந்து விடாமல் பார்த்துக்கங்க பெற்றோர்களே!

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணாடி பாத்திரத்தில் கீறல் விழுந்து விடாமல் பார்த்துக்கங்க பெற்றோர்களே!- வீடியோ

    சென்னை: அகிலா அசோகன் என்கிற ஹாதியா வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளது. பிறப்பால் இந்துவான அகிலா தன் தோழிகளின் இஸ்லாமிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாக சொல்கிறார். 2016- ஷாபின் ஜகான் என்ற மனிதரை திருமணம் செய்துள்ளார்.

    அகிலாவின் பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அத்துடன், அகிலாவின் தந்தை கூறுகிறார் , "என் மகள் சிரியாவிற்கு சென்று ஆடு வளர்ப்பதாக கூறினாள். இதை எந்த தகப்பனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது".

    இதை பற்றி நம்மால் ஒன்றும் கூற இயலாது. இதே போன்ற மற்றோரு நிகழ்வு நாம் கவனிக்க வேண்டியது. என்னவெனில், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு , ஓய்வு பெற்ற பேராசிரியர் காமராஜும் அவரது மனைவியும் தங்களது மகள்கள் தலை மொட்டை அடிக்கப்பட்டு அவர்களை சந்நியாசி ஆக்கிவிட்டதாகவும், ஈஷா யோகா மையத்தின் மீது புகார் அளித்து, அவர்களை காப்பாற்றுவதற்காக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

    தொடரும் தற்கொலைகள்

    தொடரும் தற்கொலைகள்

    சத்யபாமா பல்கலை கழகத்தில், மோனிகா என்ற மாணவி, தான் செய்த செயலால் மனம் உடைந்து செய்த தற்கொலை. 11ம் வகுப்பு மாணவிகள் மனிஷா, சங்கரி, தீபா மற்றும் ரேவதி கிணற்றில் விழுந்து தற்கொலை.

    வலுவடையாத மனங்கள்

    வலுவடையாத மனங்கள்

    காதல் தவறென்று கூறவில்லை. ஆனால் பெற்றோரையும் வெறுக்கும் அளவுக்கு எங்கே சென்றது உங்கள் மனம்? துறவறம் நல்லது. ஆனால், உங்கள் பெற்றோர்களை தவிக்க வைத்து விட்டு கல்லாகி விட்டதா உங்கள் மனம்? காப்பி தவறென்று நினைத்த உங்கள் மனது தற்கொலை ஒன்று தான் தீர்வு என்று நினைத்ததா? பெற்றோரை அழைத்து வர சொன்னதற்கே உங்களை மாய்த்துக்கொள்ள தூண்டியதா உங்கள் மனம்?

    சரியான எண்ணங்கள்

    சரியான எண்ணங்கள்

    இவற்றில் இருந்து அறிவது என்னவெனில் குழந்தைகள் சரியாக வளர்க்கப்படவில்லை அல்லது சரியான எண்ணங்கள் விதைக்க படவில்லை என்பதே. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை கண்காணியுங்கள். அவர்களுடன் பேசுங்கள். உங்களை விட இந்த உலகத்தில் சிறந்த நண்பர்கள் இல்லை என்று உணர்த்துங்கள். உங்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்துங்கள்.

    திடமான மனம் வேண்டாமா

    திடமான மனம் வேண்டாமா

    சின்ன சின்ன விஷயங்களுக்காக உடைந்து போகக் கூடாது என்று கூறுங்கள். வாழ்க்கையில் சிறு சிறு தவறுகள் நடக்கும் போது, அதை திருத்திக்கொள்ளலாம் என்று தெளிவாக கூறுங்கள். கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டியுங்கள். திடமான உள்ளத்துடன் வாழ சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கையில் மதிப்பெண் தேவைதான். அது வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல மட்டுமே என்பதை உரக்க சொல்லுங்கள். தைரியத்துடனும், நேர்மையுடனும் அடுத்தவர்களிடம் பரிவுடனும் பழக கற்றுத்தரவும்.

    குழந்தைகள் ஒரு கண்ணாடி பாத்திரம். அதில் கீறல் விழாமல் பார்த்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை என்பதை உணரவும்.

    - தனிஷ்ஸ்ரீ, சென்னை

    English summary
    Parents should monitor their kids even after they are grown, till some stage. Today's children are vulnerable to sensational decisions, observes writer Tanishshree from Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X