For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்பார்ந்த “சூரி”களே அடுத்த பரோட்டா போட்டி ரெடி... 25 சாப்பிட்டா போதும் ரூ. 5001 பரிசு!

Google Oneindia Tamil News

கோவை: கல்லிடைக்குறிச்சியைத் தொடர்ந்து கோவையிலும் பரோட்டா சாப்பிடும் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாம்.

வெண்ணிலா கபடிக் குழு படத்தில் சூரி, பரோட்டா போட்டி ஒன்றில் கலந்து கொண்டு நம்மை எல்லாம் நாக்கு ஊற வைப்பார். கடைசியில் பர்ஸ்ட் இருந்து போட்டியை ஆரம்பிக்கலாம் என இன்ப அதிர்ச்சியும் கொடுப்பார். இந்தக் காட்சி மூலம் பிரபலமானதாலேயே அவர் பேரோடு பரோட்டா ஒட்டிக் கொண்டது.

எனவே, அதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அசைவ ஹோட்டல் ஒன்று, 'நம்ம ஊரு பரோட்டா சூரி யாரு' என்ற பெயரில் கடந்த மாதம் பரோட்டா சாப்பிடும் போட்டியை அறிவித்தது.

42 பரோட்டாக்கள்...

42 பரோட்டாக்கள்...

அந்தப் போட்டிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. பல்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டி போட்டு பரோட்டா சாப்பிட்டனர். அவர்களில் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கோதர் மைதீன் என்பவர், 42 பரோட்டாக்களை சாப்பிட்டு பரிசை தட்டிச் சென்றார்.

கோவையில்...

கோவையில்...

இந்நிலையில் மீண்டும் தற்போது அதேபோன்ற போட்டி ஒன்று கோவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை அன்னூர் பகுதியில் கணேசபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்று இந்த பரோட்டா சாப்பிடும் போட்டியை அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாம்...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாம்...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக அந்த ஹோட்டலில் வருகிற 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த போட்டி நடத்தப்பட்டவுள்ளது. போட்டியின் நிபந்தனை ஒரு நபர் 25 பரோட்டாவை சாப்பிட வேண்டும் என்பது தான். முடியாவிட்டால் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் செலுத்த வேண்டும்.

முன்பதிவு கட்டாயம்...

முன்பதிவு கட்டாயம்...

இந்த போட்டியில் பங்குபெற விரும்பும்வோர் நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிவிப்பு வெளியான 4 நாட்களில் மட்டும் சுமார் 2,000 பேர் போனில் தொடர்புக் கொண்டு விவரம் கேட்டுள்ளனராம். இதுதவிர சுமார் 200 பேர் நேரில் வந்து பெயரை முன்பதிவு செய்துள்ளனராம்.

டியர் ஹோட்டல் ஓனர்ஸ்...

டியர் ஹோட்டல் ஓனர்ஸ்...

போட்டி நடத்துவதெல்லாம் ஓகே தான். ஆனால் மைதாவால் மக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடந்து வரும் சூழலில், கல்லாப்பெட்டியை நிரப்புவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல், மக்களின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு இது போன்ற போட்டி நாட்களில் கோதுமை பரோட்டாக்களை வினியோகித்தால் நல்லது.

English summary
Near Coimbatore, a private hotel is organizing a paratto eating competition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X