For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னிடம் கை நீட்டி காசு வாங்கியவர் தானே நீங்கள்... ராமதாசுக்கு பாரிவேந்தர் பதிலடி!

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வேந்தர் மூவிஸ் நிறுவனத்தன் மதன் காணாமல் போன விவகாரத்தில் பாரிவேந்தர் மீது ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்த நிலையில், கட்சி மாநாட்டிற்கும், தேர்தலுக்கும் ராமதாஸ் என்னிடம் கை நீட்டினார் என பாரிவேந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாரிவேந்தர் இன்று வெளியிட்ட அறிக்கை:

எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மற்றும் வேறு பல கல்லூரிகளிலும் இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பொய்யான வாக்குறுதி மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி விட்ட மதன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மீதும் தனிப்பட்ட முறையில் என் மீதும் அடுக்கடுக்கான பொய்களை கோர்த்து சற்றும் மனசாட்சியின்றி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

parrivendhar allegation on ramadoss

சரிந்து வரும் அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள யாரையாவது எதிரியாகச் சித்தரித்து, அவர்களை எதிர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது ராமதாஸின் அன்றாட வாடிக்கை.

தமிழ்நாடு முழுவதும் வன்னியர் இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் - பார்க்கவகுலத்தைச் சேர்ந்தவர்களும் அண்ணன் தம்பிகளாக பழகி வருகிறார்கள்.அவர்களிடத்தில் விரோதத்தை வளர்த்து அமைதியை கெடுக்க பார்க்கிறார் ராமதாஸ்.

சமூக நீதிக்காக போராடுகிறேன் என கூறும் ராமதாஸ் அவர்கள், பிற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்தின் தலைவரான என்னை தனிபட்ட முறையில் கொச்சைப்படுத்தி அறிக்கைகள் விடுவதும் பேட்டி கொடுப்பதும் எந்த விதத்தில் நியாயம்..?

சி.பி.ஐ. விசாராணை வேண்டும்" என்கிறார் ராமதாஸ். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.மேலும் காவல்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்நோக்கத்தோடு தவறான அறிக்கைகளை விடுவது வழக்கை திசை திருப்பும் முயற்சியல்லவா?

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனத்தில் சாதாரண டாக்டராக தொழில் செய்து வந்த ராமதாஸ், இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாகவும் - பல்வேறு அறக்கட்டளைகளை நிர்வகிப்பவராகவும் இருப்பது எப்படி என்பதை கூறமுடியுமா?

ஆயிரக்கணக்கான அப்பாவி வன்னியர்களின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கல்லூரியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக்கொண்ட டாக்டர் ராமதாஸ் அவர்கள், 45 ஆண்டுகாலமாக சிறு பள்ளியில் துவங்கி படிப்படியாக முன்னேறி உலக தரம் வாய்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை உருவாக்கிய என்னை பார்த்து குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.

டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். அப்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஒரு கல்லூரிக்கு இரண்டு இடங்கள் என்கிற வகையில் பெற்றுக் கொண்டு, அந்த 5 ஆண்டுகளில் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியாதா?

மேலும், அகில இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியை விசாரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ். இதே மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை நிராகரித்து விட்டுத்தானே அவரின் மகன் அன்புமணி இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியை வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டு இன்றும் குற்றவாளியாக கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக பணம் செலவழித்து, பாமக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டதே அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியுமா?

தன்னுடைய கட்சி மாநாட்டிற்கும், தேர்தலுக்கும் தன் வீட்டு சுபகாரியங்களுக்கும் - ஏன், தன்னுடைய கல்லூரியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் எத்தனை முறை தன் கட்சிக்கார்கள் மூலம் என்னிடம் கைநீட்டினார் என்பது நினைவில் இல்லையா? அவ்வாறு கொடுப்பதில் தடை ஏற்பட்டதால் கோபத்தில் என் மீது நஞ்சை கக்குவது நியாயமா?

எதிரியின் மீது குற்றம்சாட்டி தன் சுட்டுவிரலை நீட்டும்போது, மற்ற மூன்று விரல்களும்தன் மார்பை நோக்கித் திரும்புவதை அவர் உணரவேண்டும். யாரோ சில வழிப்போக்கர்கள்பாடும் வஞ்சக பாட்டிற்கு பின்பாட்டு பாட வேண்டாம் என ராமதாஸை கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு பாரிவேந்தர் கூறியுள்ளார்.

English summary
SRM group chairman Pari Vendhar allegation on pmk founder ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X