For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்த்தசாரதி கோவில் நடை அடைக்கப்பட்ட பின் நடந்த நள்ளிரவு பூஜை- ஆகம விதி மீறப்பட்டதாக புகார்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடை அடைக்கப்பட்ட பின்னர் திறந்து நடத்தப்பட்ட நள்ளிரவு பூஜையால் சர்ச்சை எழுந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மறுநாள் காலையில் பூஜைகள் நடத்தி நடை திறப்பது வழக்கம். இதுதான் அனைத்து கோவில்களிம் நடைபெறுகிறது. சிவராத்திரியன்று சிவன் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் ஆலங்களிலும் நடை அடைக்கப்படுவதில்லை.

Parthasarathy temple opened midnight against Agama rules

இந்த நிலையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் புதன்கிழமையன்று இரவு நடை சாத்தப்பட்ட பின்னர் மீண்டும் நள்ளிரவு 1 மணிக்கு பூஜை நடத்தப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Parthasarathy temple opened midnight against Agama rules

பூஜை நடத்தப்பட்டது யாருக்காக என்ற கேள்விகள் எழுந்த நிலையில் இது சசிகலா சார்பில் ஜெயலலிதாவிற்காக நடத்தப்பட்ட பூஜை என்றும் கார்களின் புகைப்படங்களும் வாட்ஸ் அப்பில் வலம் வந்தன.

இந்த நிலையில் ஆகம விதிகளை மீறி நள்ளிரவு பூஜை நடத்தப்பட்டதாக புது சர்ச்சையை கிளப்பியுள்ளனர் புரோகிதர்கள்.

English summary
Devotees and Prokithara are not happy that Triplicane Parthasarahy temple was opened midnight against the Agama rules
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X